இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 டிசம்பர், 2014

அகராதி தமிழ் காதல் கவிதை

ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ...
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!

ஈகம் போல் உடல் அழகு ....
ஈசன் போல் முக அழகு ....
ஈடுகொடுக்க முடியாமல் ...
ஈசன் யான் துடிக்கிறேன் ....
ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!!

ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....
ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...
ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....
ஈங்கு போற்றும் உன்னத காதல் ...
ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!!

+

ஈர்மை ; இனிமை ,பெருமை 
ஈரந்தி ; காலை மாலை 
ஈகம் ; சந்தனமரம் 
ஈங்கு ; இவ்வுலகம் 
ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை 

+
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை 
கவிஞர் ; கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக