இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 டிசம்பர், 2014

காட்சியும் கவிதையும் - 01





நாம் 
நடை பழகும் போது ... 
எமக்கு ஊன்று கோல்... 
நம் தாய் - நடை இடறி ... 
நாம் விழுந்தாலும்... 
தன்னையே நிந்திப்பார் ... 
தாய் .....!!! 

தாயே .... 
நீங்கள் நடை இடறும் போது... 
நாங்கள் தானே உமக்கு ... 
ஊன்று கோல் - எதற்காக 
இந்த பட்டவயத்தில் ஏன்... 
இந்த பட்ட தடி ...? 

தாயே புரிகிறது ... 
உங்கள் சிந்தனை ... 
பிள்ளையை சுமந்த நீங்கள் ... 
பிள்ளைக்கு சுமையாய் இருக்க ... 
விரும்பவில்லை போலும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக