இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 டிசம்பர், 2014

நான் அரசியல் வாதியாவேன் ....

நான் அரசியல் வாதியாவேன் ....
அடுத்த வேளை உணவுக்கு ...
போராடினாலும் என்  கர்வம் ...
விட்டு கொடுக்கமாட்டேன்
இறந்தாலும்..இறப்பேன்
என் வறட்டு கர்வத்தை விடவே
மாட்டேன் .....!!!

இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டு ...
நல்லவனாக நடிக்க நாள் தோறும் ...
ஒவ்வொரு வேடம் போடுவேன் ...
முட்டாள்கள் நான் உண்மையானவன் ...
என்று ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள் ....
சிலகாலத்தில் குறுக்கு வழியால் ....
பணம் சம்பாதிப்பேன் - அதில் ஒரு
பகுதியை சமூக தொண்டு செய்வேன் ...!!!

சமூக சிப்பி.. சமூக பற்றாளன் ...
சமூகத்தில் பிரதி நிதி என்று ...
சமூகம் பட்டம் தரும் -அதுவே ......
அரசியலுக்கான அடிப்படைத்தகுதி ...
அரசியல் வாதி ஆவேன் - அப்போதான்
சொன்னதை செய்யதேவையில்லாத ...
சமூக தொண்டன் ஆவேன் .....!!!

உண்மை அரசியல் வாதிகளை ...
ஏளனம் செய்வேன் .வாழதெரியாத ..
பச்சோந்திகள் என்பேன் .....!
இறப்பேன் எனக்கு சிலை வரும் ....
இறந்தபின்னும் சமூக தொண்டனாக ...
என் சார்பு மக்களுக்கு தலைவனாக ...
வாழ்ந்து கொண்டிருப்பேன் ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக