இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

கே இனியவன் சென்ரியூக்கள்

சுவருக்குள்  சண்டை
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி

$$$

குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்

$$$

உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி

$$$

பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்

$$$

கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு

$$$

கே இனியவன்  சென்ரியூக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக