எமக்காக
பாவங்களை சுமப்பவரே ....
போதும் ஆண்டவரே நீங்கள் ...
சுமந்தது ....!!!
சிலுவையில் உம்மை ...
சித்திரவதை செய்தபோதும்
சிரித்துக்கொண்டே எமக்காய் ...
சித்திரவதையை ஏற்றவரே....
சித்தம் அறிந்து சொல்கிறேன் ...
எமக்காக நீர் படும் சித்திரவதை ...
போதும் ஆண்டவரே போதும் ....!!!
அண்டத்தில் வாழும் மாந்தரின் ...
அறிவுக்கண்ணை திறந்துவிடும் ...
அவரவர் பாவங்களை அவரவரே ...
சுமக்கவிடும் - எமக்காக நீவீர்
சுமப்பதால் இன்னும் பாவங்கள் ...
பெருகிக்கொண்டே செல்கிறது ....!!!
ஒவொருவரின் பாவத்துக்கும் ...
அவர்கள் சிலுவை சுமக்கனும் ...
சித்திரவதை படவேண்டும் ...
நீவீர் எமக்காக பட்டதுயரை ...
அவரவர் சுமக்கனும் - பாவத்தின் ...
வலியை அவரவர் உடனுக்குடன் ...
புரியவேண்டும் ...!!!
உயிர் வேறு உடல் வேறாய்...
பேரண்டத்தின் சக்தியால் பெற்றவரே ...
நீ பெற்ற வலியை நாம் பார்த்த போது ....
எம் உயிர் வலித்தது - காரணம் ..
உடல் உயிர் ஒன்றாய் வாழ்கிறோம் ....
ஆண்டவரே சுத்த அறிவை தாரும் ....
எம்மையும் உடல் வேறு உயிர் வேறாய் ..
தொழிற்படவையும் ......!!!
மனித பகுத்தறிவு சிறப்பாக ....
தொழிற்பட்டால் யார் பாவத்தையும் ...
யாரும் சுமக்க தேவையில்லை ....
பாவத்தை சுமக்கும் பாதைகள் ...
தோன்றப்போவதில்லை .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக