இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூலை, 2015

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
------
 
காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
-----
 
முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
------
 
அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
----
 
பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஆமீக சிந்தனை - நெல் மணி

ஆமீக சிந்தனை - நெல் மணி 
-----------------------------------------

ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு 
உதவுகிறது . 

மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.

ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.

+
சிந்தனை உருவாக்கம் 
கே இனியவன் 
வாழ்க வளமுடன்

காதல் வேண்டாம்

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

அவஸ்தைபடுவது நானே ....!!!

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

முகம் வாடி நிற்கிறது

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

தூக்கி எறியமாட்டேன் .....!!!

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

விழிப்பாக இருந்தால்  நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

புதன், 29 ஜூலை, 2015

காதலை எதிர்கிறாய் ......!!!

வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!

காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!

காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825

மீண்டும் துளிர்க்காது .....!!!

காதலை ...
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!

பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம்
காதல் ......!!!

ஒவ்வொரு காதல்
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;824

இதயத்தை தந்துவிடு ....!!!

காதல்
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!

என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை
மறந்துவிட்டேன் ....!!!

இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;823

நினைவுக்கு வருகிறாய் ....!!!

மனதில் கவலை ....
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ  நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!

வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!

காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822

உன் காதல் போதும்

ஒன்றில் மறந்துவிடு 
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!

சூரியன் 
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!

கல்லறையில் இருந்தும் 
கூறுவேன் -காதல் தான் 
என்னை உலகிற்கு காட்டியது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;821

கலாம் அய்யா மண்ணில் விதைக்கப்படுகிறார்

இளைஞர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
உங்கள் சோம்பல் தன்மையை .... 
புதைத்து விடுவதுதான் .....!!! 
 

மாணவர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
ஒவொருவரும் விஞ்ஞானியாக .... 
சமூக சேகவனான மாறுவேன் .... 
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!! 
 

அரசியல் வாதிகளே ....!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்தமா சாந்தியடைய .... 
அவரின் எண்ணங்களை உங்கள் .... 
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!! 
 

உலக தாய்மார்களே .....! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அந்த நிமிடத்தில் பிறக்கும் .... 
குழந்தைகள் ஒவ்வொருவரும் ... 
கலாமாக பிறக்கவேண்டும் .... 
பிராத்தனை செய்யுங்கள் .....!!!

காதல் இயற்கையானது

காதல் இயற்கையானது

 

காதல் பூக்கள் போல் 
அழகானது ஜாக்கிரதையானது ....!!! 

காதல் கடல் போல் 
கவர்ச்சியானது ஆழம் புரியாதது ....!!! 

காதல் காற்றுபோல் போல் 
இருந்தால்வாழ்க்கை இல்லையேல் ...? 

காதல் நெருப்புபோல் போல் 
கதகதப்பானதும் கருக்கவும் கூடியது ....!!! 

காதல் மழையை போல் 
நனைய நனைய சுகம் பின்பு ஜூரம் 

காதல் இயற்கையை போல் 
அனைத்து இயக்கத்துக்கும் அடிப்படையானது ....!!!

இவையெல்லாம் அழகு

இவையெல்லாம் அழகு

 

இருளுக்கு அழகு 
நிலவு தோன்றுவது ....!!! 

காற்றை அழகு 
இசைதோன்றுவது ....!!! 

பூமிக்கு அழகு 
பூக்கள் பூப்பது ...........!!! 

காதலுக்கு அழகு 
கவிதை தோன்றுவது .....!!! 

நட்புக்கு அழகு 
தோள்கொடுப்பது .......!!!

செவ்வாய், 28 ஜூலை, 2015

காதலாய் நுழைந்தேன் ....

காதல் கவர்ச்சியால் .....
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!

நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!

காதல் பிரிவின்பின் ....

காதல் இருக்கும்போது ....
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!

காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி  தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்

வலியுடன் நானும் அவளும் ....!!!

என்னவளை இதயத்தில் .... 
வைத்திருந்தேன் -தப்புதான் ... 
என் இதயத்தையுமெல்லா.... 
கொண்றுவிட்டாள்.....!!! 

உயிரோடு இருதயசிகிச்சை ..... 
காதலில் தோற்ற இதயங்களில் .... 
நிகழ்ந்திருக்கும் ....!!! 
+ 
வலிக்கும் இதயத்தின் கவிதை 
வலியுடன் நானும் அவளும் ....!!!

"அன்பு உறவாகும் .....!!!

ஒவ்வொரு பிறந்தநாளும் ....
மனிதனுக்கு அனுபவபதிவுகள் .....
கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை ....
கசப்பாகவும் இனிப்பாகவும் ....
இருந்திருக்கும் .....!!!

இயன்றவரை இனிமையாக ....
வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் .....
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ....
வருங்காலத்திலும் நாம் எண்ணும் ...
எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!!

எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் .....
எல்லோரையும் தன்னைப்போல் வாழ ....
வேண்டும் என்ற சிந்தனை ....
ஒரு கை கொடுத்தால் மறு கை ....
தடுக்காத பழக்கம் கொண்ட உறவே ....
"அன்பு உறவாகும் .....!!!

தங்களும் தங்கள் குடும்பமும் ....
இன்றுபோல் என்றும் இன்பமாக ....
நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன்
உங்களை ஆசீர்வதித்தபடியே....
இருப்பான் - வாழ்க வளமுடன்

இதயத்தை பூட்டும் சாவி

எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!

இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41

காதலின் வலி புரியும் ....!!!

சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!

என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40

காலம் ஆனார் கலாம்

காலம் ஆனார் கலாம் 

காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
 

தன் 
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
 

தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு 
இறந்தகாலமே இல்லை -எப்போதும் 
நிகழ் காலம் தான் ....!!!

தற்காலபாரதியார் அய்யா கலாம்

தற்காலபாரதியார் அய்யா கலாம் 

பாரதியார் 
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!

அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!

ஒருவனுக்கு 
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!