இன்றைய சின்னக் கருத்து
🌹🌹🌹
வியர்வை காயமுன் ஊதியத்தை கொடுத்துவிடு
( நன்நெறி நூல்கள்)
வியர்வை வரும்வரை
உழைப்பைக் கொடுத்து விடு
( நற் சிந்தனை)
இன்றைய சின்னக் கருத்து
🌹🌹🌹
வியர்வை காயமுன் ஊதியத்தை கொடுத்துவிடு
( நன்நெறி நூல்கள்)
வியர்வை வரும்வரை
உழைப்பைக் கொடுத்து விடு
( நற் சிந்தனை)
உன்
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!
காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!
காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும்..!
காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ..
@
கவிப்பேரரசு இனியவன்
🌹
(என் கவிதைகள் உன்னை காயப்படுத்தினால் என்னை மன்னித்து விடு )
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என்
இதயம் மறந்து விட்டது
உனக்கு
கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால்
ஒன்று மட்டும் ..
உண்மை
உன்னில் மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
@
கவிப்பேரரசு இனியவன்
அந்த நிமிடம்
வரை வலியில்லை
இந்த நிமிடம் வரை
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!
இதயத்தில்
என் ஒவ்வொரு
நரம்பையும்
முற்களாக மாற்றியவள்
நீ
என் இதயம்
ஈரமாக இருப்பதால்
காத்திருக்கிறேன்
உன் இதயமும்
ஈரமாகும்
என்ற சின்ன
ஆசையுடன் .......!!!
அடுக்கிடுக்குத் தொடரில்
காதல் கவிதை
------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி....
சின்னஞ்சிறிய
கண்ணழகி .....
பென்னம் பெரிய
முகவழகி ....!!!
வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே .....
பதைபதைத்து
போனேனே ,,,,,,!!!
பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?
படபடக்குது இதயம்
தள தளக்குது நாக்கு
துடி துடிக்குது மூச்சு
சட புட வென்று..
பதில் சொல்...
^^^
மொழிக்கவிதை
கவிப்பேரரசு இனியவன்
நீ...
தாவணியில்.....
வரும்போது.......
தாவும்......
என் மனம்.....
சேலையில்.....
வரும் போது....
செத்தே போகிறேன்....!!!
அதிகாலை.....
சூரியன்வரும்.....
போது பூக்கள்.....
மலர்வதுபோல்.....
நீ வரும்போது....
நான் மலர்கிறேன் ...!!!
&
கவிப்பேரரசு இனியவன்
தேனிலும் இனியது காதலே
மூன்றாம் அறிவை பெற்றுக் கொள்
(சிந்தனைக் கவிதை )
📝📝📝
"அ" எழுதியவுடன்......
ஆரம்பமாகிவிடும்.....
ஏட்டறிவு........!
ஏட்டறிவில்.....
ஏற்றம் கண்டவரும்........
உள்ளனர்......
ஏட்டறிவு எட்டாதவரும்.....
உள்ளனர்.........!
ஒவ்வொரு வயதுக்கும்.....
ஒவ்வொரு பட்டறிவு.......
ஏட்டறிவில்லாமல்.......
பட்டறிவால் வாழ்வியலில்.....
பட்டதாரியானவர்களும்.....
ஏராளம்.........!
ஏட்டறிவும் பட்டறிவும்.....
போராட்டத்தாலேயே.......
பெறப்படுகிறது.......!
ஏட்டறிவும் பட்டறிவும்.....
ஏதோ ஒருவகையில்.....
யாரோ ஒருவரின் சாயல்....
அல்லது நிழலாகவே.....
இருக்கிறது...........!
சாயல்களும் நிழல்களும்.....
காலத்தால் மறைந்துவிடும்...
இல்லையேல் அவரவர்......
காலத்துக்கே பொருந்தும்......!
இன்றைய உலகுக்குதேவை......
மூன்றாம் அறிவே.......
யாருடைய சாயலோ நிழலோ.....
இல்லாமல் உனக்கே உரிய......
அறிவே மூன்றாம் அறிவு.......!
மூன்றாம் அறிவை......
தன்னுள்ளே அறிந்தவனே.....
இன்றைய சாதனையாளன்......
இது ஆளுக்காள் வேறுபடும்.....
நிழலாகவும் சாயலாகவும்.....
இன்னொருவருக்கு தொடராது.....
தொடரவும் முடியாது
@
கவிப்பேரரசு இனியவன்
பார்வையில்..
தீப்பொறியாய்....
இருந்தாள்....
பேசுவதில்...
தீபமாய்...
இருந்தாள்....
கற்பில்...
தீப்பந்தமாய்...
இருந்தாள் ....
அன்பில்....
அழகான சுடராய்...
இருந்தாள் ....
காதலால்....
என்னைக்கருக்கி..
கண்களை.....
திறந்து பார்....
அனைவரும்....
தெரிவார்கள்.....
கண்களை.....
மூடிப்பார்....
உனக்குப்.....
பிடித்தவர்களே....
தெரிவார்கள்.....
தோல்வியின்....
அடையாளம்....
தயக்கம்....!
வெற்றியின்....
அடையாளம்....
துணிச்சல்....!
துணிந்தவர்...
தோற்றதில்லை....
தயங்கியவர்....
வென்றதில்லை....
கையில்....
ரோஜாக்களோடு....
கண்ணாடி முன்...
நில்லுங்கள்....
இன்னொரு..
ரோஜாக்களைக்....
காண்பீர்கள்....
அது நீ ....!!
உன்னையே
பார்த்த கண்கள் ....
உனக்காகவே
நடந்த கால்கள் ....
உனக்காகவே
பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே
இருக்கும் உயிர் ....!
எதற்காக மௌனமானாய்....
நீ
அமைதியாகயிருந்து ...
எனக்கு
சமாதி கட்டுகிறாய் ....
நான்
சமாதியாகயிருந்தே ....
உன்னைக் காதலிக்கிறேன்..... !
❤️
இலக்கியக் கவிப்பேரரசு
இந்த...
வயதிலும்....
நினைத்தவுடன்...
கண்ணீரை...
வரவழைக்கும்...
சொல்...
"அம்மா"
🌺
கருவறையில்
இருப்பது கடவுள்
என்றால்
கருவறையில்
தோன்றிய நீ யார்..?
🌺
தன்.....
தாயைப்போல்..
எல்லா தாயையும்..
நினைப்பவன் ஞானி ...!!!
எந்த....
தாயையும் நீங்கள் ....
அம்மா என்று
உங்களை
தன்.......
குழந்தையாகவே
பார்க்கும்.....
உன்னத உயிர்...
தாய்...!!!
🌺
இலக்கியக் கவிப்பேரரசு
இனியவன்
என்னை
நன்றாகக் காயப்படுத்து .....
உனக்கு அதில்
இன்பமென்றால் ..
நன்றாகக் காயப்படுத்து.....!
எதையும் ...
தாங்கும் இதயம் என்று சொல்லமாட்டேன் ....
உனக்கு இல்லாத....
என் இதயம்
எனக்கும் வேண்டாம் ....!
@
கவிப்பேரரசு இனியவன்
நீ
என் கவிதை
அழகென்கிறாய் ...
நீ
அழகாயிருப்பதால்
கவிதை அழகாய்...
இருக்கிறது.....!
நீ
என்னைப் ....
பிரிந்துபார்......
கவிதை அழுதபடி ......
உன் மடியிலேயே....
தூங்கும் ....!
நீ....
பார்ப்பது....
கவிதை அல்ல....
நான்....... !!!
+
இலக்கிய கவிப்பேரரசு
இனியவன்