இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 அடுக்கிடுக்குத் தொடரில்  

காதல் கவிதை 

------------------------

கன்னங்கரிய முடியழகி......

செக்கச் சிவந்த உடலழகி....

சின்னஞ்சிறிய

 கண்ணழகி .....

பென்னம் பெரிய

முகவழகி ....!!!


வெட்டவெளி பாதையிலே ....

தன்னந்தனியே வந்தவளே ...

நடுநடுங்க வைக்கிறாயே ..... 

பதைபதைத்து 

போனேனே ,,,,,,!!!


பென்னம் பெரிய ஆசையுடன் .....

தன்னந்தனியே தவிக்கிறேன் ....

பச்சைப்பசேரென ஒரு பதிலை ....

திக்குத்திணற சொல்வாயோ ....?


படபடக்குது இதயம்

தள தளக்குது நாக்கு

துடி துடிக்குது மூச்சு

சட புட வென்று.. 

பதில் சொல்...


^^^


மொழிக்கவிதை 

கவிப்பேரரசு இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக