இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

உயிர்க்கிறேன் ....!!!

நான் சாகா வரம் ...
பெற்றவன் -தினம் 
தினம் உன்னிடம் செத்து 
பிழைக்கிறேன் ....!!!

உன்னை ஒருநொடி ...
பார்க்கும்போது இறக்கிறேன் ..
மறு நொடி நீ பார்க்கும் போது ...
உயிர்க்கிறேன் ....!!!

என் மூச்சே  காதல் தான் ....!!!
கே இனியவன்

என் மூச்சே காதல் தான் ....!!!

நொடிக்கு நொடி ....
மூச்சு விடுகிறேனோ ...
இல்லையோ ....
நொடிக்கு நொடி ....
நினைவில் வதைக்கிறாய் ...
உயிரே .....!!!

மூச்சு அடக்கி 
வாழ்ந்திடுவேன் .....
உன் பேச்சு இல்லையேல் ..
அடங்கிடுவேன் ....!!!


என் மூச்சே  காதல் தான் ....!!!
கே இனியவன்

புதன், 26 நவம்பர், 2014

பாதையில் குழி வரவில்லை

என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!

நீ 
புரிய முடியாத புதிர் 
நான் புரிந்தும் புரியாத 
காதல் புதிர் ...!!!

நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு 
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?

எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்.... 
பிரிவும் காதல் தான் ....!!!

சீ ....உனக்கு
காதலிக்க கூட  ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;754

வலியாக மாறி விடுகிறது ...!!!

உன்னை நினைத்து 
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!

காதலுக்கு 
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல் 
புதைகுழிக்குள் 
நடக்கிறது  ....!!!

என்னை விட உலகில் 
ஏழை யாரும் இல்லை 
இன்ப வரிகளே 
வருகுதில்லை ......!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;753

கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உன்னை 
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உனக்காக 
காத்திருந்த இரவுகளால் 
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;752

கண்ணீர் வரவைகிறது ...!!!

காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை 
நிறமுமில்லை .....
காதலில் பயன் 
படுத்தாதே .....!!!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!

நான் 
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;751

புதன், 19 நவம்பர், 2014

பலன் இருக்கும் ....!!!

நீ
தூக்கி எறிந்த இதயம் ...
தவமிருகிறது -மீண்டும்
நீ வருவாய் என்று ....!!!

எந்த தவத்துக்கும்
பலன் இருக்கும் ...
உன் மௌனத்துக்கும்
பலன் இருக்கும் ....!!!

நீதான் நினைகிறாய் ....

நீதான் நினைகிறாய் ....
உன்னை விட்டு நான் ...
தூரத்தில் இருக்கிறேன் ...
விலகி இருக்கிறேன் ...
பாசமில்லாமல் இருக்கிறேன் ...
என்கிறாய் ....!!!

உனக்கு புரியுமா ...?
நான் இங்கு பார்க்கும்
பார்வைகள் அனைத்திலும் ..
நீயே இருகிறாய் ...
தெரிகிறாய் ....
பேசுகிறாய் ......!!!

ஒரு இதயம் தான் ....!!!

நீ
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும்
பேசுவதும் ....!!!

நீ
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது
ஒரு இதயம் தான் ....!!!

ஒரு இதயம் தான் ....!!!

நீ 
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும் 
பேசுவதும் ....!!!

நீ 
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது 
ஒரு இதயம் தான் ....!!!

எங்கே புரியப்போகிறது ...?

உனக்கு
எங்கே புரியப்போகிறது ...?
வலியின் வலி ...?
பிறப்பின் போது தாய் ...
உன் வலியை சுமர்ந்தார் ...!!!

காதல்
இறப்பின் போது ....
உன் வலியை நான் ..
சுமக்கிறேன் ....!!!

அகராதி தமிழில் கவிதை -02

ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!

ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம்  இன்றி வாழ்வேன் -உன் 
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ 
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!

ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!

ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!

ஆகம் - நெஞ்சு 
ஆகூழ் -நல்வினைபயன் 
ஆணு -இன்பம் 
ஆசந்தி -சவபெட்டி 

கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை 
கவிஞர் ; கே இனியவன்