இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 நவம்பர், 2015

இதய நரம்பில் உன் கீதம் ...!!!

உன் 
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!

பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக  மாறினாய் ...?

என் இதயம் இருண்டு  ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910

எனக்காக பிறந்த தேவதை

இறைவனை தரிசித்து ....
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!

பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?

நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?

உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909

என்ன சாபமோ ...?

தென்றல் காற்று ....
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!

மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?

தவமிருந்து
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908

மூச்சோடு முடிகிறது ...!!!

என்னை கொடுத்து ...
உன்னை பெறுவது ...
காதல் .....!!!


மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!


காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து 
மூச்சோடு முடிகிறது ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907

வியாழன், 26 நவம்பர், 2015

வாய் திறந்து பதில் சொல்

கேட்டுக்கொண்டிருக்காதே...
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் ...
உன்னை என்று ...

பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...

காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்
என்று சொல் ..

பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...

இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!

தனிமையில் இருக்கிறேன் ...!!!

கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தூக்க உன் தம்பி துணையாய்
வருகிறான் ....!!!

உன் அருகே உனக்கு ...
பாதுகாப்பாய் அழைத்து ...
செல்ல உன் அம்மா .....!!!

பஸ் ஏறும்  இடத்தில் ...
வழியனுப்பி வைக்க ....
உன் உறவினர் .....!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனிமையில் இருக்கிறேன் ...!!!

கே இனியவன் - கஸல் 105

தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!!

உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..!!!

நீ 
வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 105

நீயும் மாறுவாய்

உன்னைப்போல் ....
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக  ....
பிறக்கவேண்டும் ...!!!

அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!

போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

கனவுகளை கண்ணீர் ஆக்குகிறாய்

நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!

நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

இதயத்தை கிழிக்காதே

என்
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!

உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

புதன், 25 நவம்பர், 2015

அவள் தந்த நினைவு ....

அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின்  அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!

+

எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!

@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல் ஒன்று கவிதை இரண்டு

உன்னை ....
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!

+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!


@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு

செவ்வாய், 24 நவம்பர், 2015

காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32

முகம் புகைப்படமாய்

உன்னை பிரிந்து பலகாலம் ....
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31

என்னை கருக்கி விட்டாள்

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30

அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
------
விடுதலை  போராட்டங்கள் ....
எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல....
மடிந்தவர்கள்  மண் பொம்மைகளல்ல.....
போராடிய காலம் எந்தளவோ....
விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!!

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
பொருளாதார வளங்கள் அழியும்போது ....
பொருளாதார தடை விதிக்கும் போது ....
பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....
பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....
யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....
இனத்தின் அடையாளங்களை அடமானம் ....
வைக்கும்போதும்  இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!!

தந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....
தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....
பக்திகொண்டு போராடுவோம் .....
உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....
எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....
எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!




மறதியை மறந்திடலாம்

உன்னோடு 
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!

உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!

மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 906

ஏமாறமாட்டேன்

ஏமாறமாட்டேன் ....
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!

காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னோடு இருந்தவளே ....!!!

என்
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!

சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருகாத பூக்கள் .....!!!

கருகாத பூக்கள் .....!!!
-------
எம் .....
மண்ணில் தான் ....
கறுப்பு பூக்கள் அழகழகாய் ....
பூத்தது - பூத்த பூக்கள் ....
வாடிவிட்டதே - நினைக்காதீர் ....
எம் மனதில் என்றும் வாடாமலர் ....
உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!

எம் 
மண்ணில்தான் கடலில் ....
நீலபூக்கள் பூத்தன ....
பூத்த பூக்களை அலை ....
அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....
கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....
காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!

கறுப்பு எண்ணங்களாலும் ....
கருப்பு ஜூலையாலும் ....
கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....
கறுப்பு சிந்தனைகளால் ....
கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....
கருகாத பூக்கள் .....!!!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

எதுவுமே நிஜமில்லை

காதலோடு வாழ்ந்த நீ 
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!

எதுவுமே நிஜமில்லை 
காதல் மட்டுமே நிஜம் ....!!!

இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 905

என்னை நீ அணைத்து

எரிந்து கொண்டிருக்கும் 
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!

நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!

இந்த 
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 904

இதயமே கவனமாய் இரு

புவியீர்ப்பால் ....
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!

என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!

இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 903