இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
------
விடுதலை  போராட்டங்கள் ....
எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல....
மடிந்தவர்கள்  மண் பொம்மைகளல்ல.....
போராடிய காலம் எந்தளவோ....
விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!!

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
பொருளாதார வளங்கள் அழியும்போது ....
பொருளாதார தடை விதிக்கும் போது ....
பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....
பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....
யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....
இனத்தின் அடையாளங்களை அடமானம் ....
வைக்கும்போதும்  இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!!

தந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....
தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....
பக்திகொண்டு போராடுவோம் .....
உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....
எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....
எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக