இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 மே, 2013


ஆர்முடுகல் வேகத்தில் 
உன் இதயத்தில் 
என்னை தேடுகிறேன் 

என் மூச்சுகாற்றில் 
நீ ஊஞ்சலாடுகிறாய் 

நான் விடுவது 
கண்ணீர் அல்ல 
காதல் தலையெழுத்து


என் முகத்தில் நீ 
என்று வந்தாயோ 
அன்றே என் முகத்தை 
காணவில்லை 

நீ 
நெருப்பைவிட 
அன்பானவள் 
நினைவுகளைவிட 
மென்மையானவள் 

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ ..........


என் முகத்தில் நீ 
என்று வந்தாயோ 
அன்றே என் முகத்தை 
காணவில்லை 

நீ 
நெருப்பைவிட 
அன்பானவள் 
நினைவுகளைவிட 
மென்மையானவள் 

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ ..........

நான் செய்த குற்றம் 
உன்னை கண்டது 
காதலித்தது 

என்னிடம் 
ஒரு உறவும் இல்லை 
உன் இதயம் மட்டும் 
இருக்கிறது 

நீ திரும்பிப்பார்க்கும் 
போதெல்லாம் 
இறந்துவிடுகிறேன் ................

செவ்வாய், 28 மே, 2013


கண்ணை தேடுகிறான் 

காதலில் தோற்றவன் .. 
கண்ணீர் விடுகிறான் 
காதலை விரும்புபவன் 
கண்ணை தேடுகிறான் 
நான் இரண்டுக்கும் நடுவில் 
தத்தளிக்கிறேன் .... 

நான் எரிகிறேன் நீயோ 
சூரிய குளியல் 
குளிக்கிறாய் 

நான் என் விருப்பத்தை 
சொன்னேன் -அவள் 
தன் மறுப்பை சொன்னாள் ...!!! 

கஸல் ; 76



என் இதயத்தில் 

நீ தரும் வேதனைகள்... 
நீவரும் போது வருவதில்லை... 
நீ -போகும் போது ... 
போவதுமில்லை ...!!! 

என்னோடு நீ 
இருக்கும் போது 
நான் இருப்பதில்லை 

என் இதயத்தில் 
கண் உள்ளது 
நீ வந்ததும் 
கண்ணீர் விடுகிறது 
சில வேளை கண்சிட்டுகிறது..!!!



கல்யாணி ராகம் 

நீ 
பூவாகவும் 
மென்மையாகவும் 
இருக்கிறாய் -பூவின் 
சிரிப்பும் வாட்டமும் 
தெரிகிறது உன்னில் 

சில வேளையில் 
கல்யாணி ராகம் 
சிலவேளையில் 
பூபாளராகம் 
நானோ சோகம் 

நீ பிரிந்து சென்ற பின் 
என் வாழ்வில் 
முழு நிலா 
வந்ததே இல்லை 

கஸல் ;78



முக நூல் கவிதை 02 

பாட நூலுக்காக செலவிட்ட... 
நேரத்தைவிட -உனக்காக... 
முகநூலுக்காக செலவிட்ட .. 
நேரம் அதிகம் -இப்போ 
உடல் நூலுக்காக (புடவை ) 
தவிக்கிறேன் ....!!! 


************************* 


முகம் பார்க்காமல் 
முகவரியை -மட்டும் 
கொண்ட நம் 
முகநூல் காதல் 
முகம் நூராமல் 
இருந்தால் நன்று 
நூலை அறுத்துவிடாதே 
நம் காதலுக்கு ....!!!



நான் வென்றும் விட்டேன் 

நான் பின்னும் வலை .. 
உன் கண் மீனுக்காக .. 
இல்லை . 
கண்ணீருக்காக 

நான் உன்னை 
காதலிக்க வில்லை 
நீ விட்டுவிட்டு போனால் 
தோல்வியை உனக்கு 
முன்பே விரும்பிவிட்டேன் 
நான் வென்றும் விட்டேன் 

இரவு நட்சத்திரம் போல் 
உன் நினைவுகளும் 
மின்னுகின்றன 

கஸல் 79


ஓட்டைப்பானை 

காதலில் நாம் 
ஓட்டைப்பானை 
நீ என்னை நிரப்பு 
நான் உன்னை 
நிரப்புகிறேன் 

நான் உன் காலில் மெட்டி 
போடவிருமபுகிறேன் 
நீ விலங்கு போட 
விரும்புகிறாய் 

நீ தயவு செய்து 
காதலிக்காதே 
பார்த்ததிலேயே 
இத்தனை தொல்லை 
என்றால் காதலித்தால் ..???



அணையப்போகிறேன்.... 

என்னை சுற்றி இருந்த .. 
இருளை நீக்கியவள் -நீ 
அணையப்போகிறேன்.... 
அன்று அடம்பிடிக்கிறாய்... 
நானோ கவிதை என்ற... 
சுவரால் பாதுகாக்கிறேன்... 
நீ வாயால் ஊதி.. 
அணைக்கப்போகிறேன்... 
என்கிறாய் -நான் என்ன ... 
செய்யமுடியும் ...???


திங்கள், 27 மே, 2013


-முகநூல் கவிதை -


படைப்புக்கள் எப்போதும் பொழுது போக்கானவை அல்ல எந்தவகை படைப்பிலும் நிச்சயம் சமூக சீர்திருத்தம் நிச்சயம் உண்டு ..அது கவிதையாக கதையாக கட்டுரையாக நகைச்சுவையாக ..எதுவாகவும் இருக்கலாம் ...!!!

இந்தவகையில் -முகநூல் கவிதைகள் -சிலவற்றை
வெளியிடப்போகிறேன்..முகநூலால்..நிறைய பயன்பாடுகள் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ..அதே முகநூல்..சமூக சீரழிவுக்கு காரணமாக இல்லாமலும் இல்லை ...!!!

எனது படைப்பின் நோக்கம் என்னால் முடிந்த அள்வுக்கு சமூக சீர்திருத்தத்தை வெளிப்படுத்துவதாகும் உங்களின் நோக்கமும் 
அதுதான் ...!!!

எனது பல்வேறு புதிய படைப்புகளில் இதுவும் ஒன்று ..கானாகவிதை ,கடுகுக்கதை .கடுகுக்கவிதை .தகவலும் கவிதையும் ,கவிதையில் ஒரு கதை .....போன்ற படைப்புக்களில்

-முகநூல் கவிதை -

என்பதும் ஒரு புதிய முயற்சி கடந்த காலம் போல் இதற்கும் 
உங்கள் ஆதரவும் கருத்தையும் எதிர் பார்க்கிறேன் ....ஒரு முகநூல் கவிதை இதோ ...

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட -உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ 
உடல் நூலுக்காக (புடவை )
தவிக்கிறேன் ....!!! 

இதுபோன்ற என்னால் முடிந்த விழிப்புணர்வை 
ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ...
........ பணிவுடன் நன்றியுடன்....

ஹைக்கூ .... 

தன்னை அழித்தாலும் 
இறுதிவரை மூச்சுதரும் 
- மரம்- 
****************************** 
நவரசத்தை காட்டும் 
சலனமுள்ள சடப்பொருள் 
-தொலைக்காட்சிபெட்டி - 
****************************** 
கருவில் கலையாமல் 
தெருவில் கலையும் 
-குழந்தை தொழில் - 
****************************** 
தான் நடனமாடி 
பிறரை வாழவைக்கும் 
-பேனா -



வரும் ! வரும் ! வரும் ! 

சிரித்துப்பார் நலம் வரும் .. 
சிந்தித்துப்பார் தெளிவுவரும் .. 

நல்லவனுக்கு நியாயம் வரும் .. 
கெட்டவனுக்கு அநியாயம் வரும் .. 

கண்ணுக்கு காதல் வரும் .. 
காமத்துக்கு உடல் வரும் .. 

பேனாவுக்கு கவிதை வரும் ... 
பெயரோடு முதல் எழுத்து வரும் .. 

பெண்மைக்கு வெட்கம் வரும் .. 
ஆண்மைக்கு வீரம் வரும் .. 

பண்போடு வாழ்ந்துபார் ... 
எல்லோருக்கும் எல்லாம் வரும்



தனிமையில் அழுதேன்,, 

தனிமையில் அழுதேன்,, 
உறவுகள் இல்லாமல் அல்ல.... 
என் தாய் நினைவு வாட்டியதால் ... 
அம்மா!!! 
உன் இறப்பின் பின்... 
நான் அழுதேன்... 
உலகில் பாசமே இறந்ததால்.. 
இன்னும் நான் நம்பிக்கையுடன் .. 
இருக்கிறேன் ... 
நீ தானம்மா என் மகள் ..!!!



இதயம் காயப்படுகிறது ..!!! 

நீ என் வானம் ... 
நான் அதில் இருக்கும் .. 
விடிவெள்ளி ... 
விடியும் வரை.. 
காத்திருக்கிறேன் ... 
உன்னோடிருக்க ... 

பட்டம் விட... 
ஆசைப்பட்டேன்... 
இப்போ பட்டம் பெற ... 
ஆசைப்படுகிறேன் .. 
உன்னை அடைய .. 

நீ அருகில் .. 
வரும் போதேல்லாம் .. 
இதயம் காயப்படுகிறது ..!!! 

கஸல் ;66



கொடியது கொடியது 

கொடியது கொடியது 
காதல் கொடியது 
அதனிலும் கொடியது 
உன் காதல் எனக்கு 
கொடியது 

இனியது இனியது 
தனிமை இனியது 
அதனிலும் இனியது 
உன்னால் நான் 
தனிமையானது 

வலியது வலியது 
என் காதல் வலியது 
அதனிலும் வலியது 
நீ தந்த வலியானது 

கஸல் ;69



கண்ணீரால் கையொப்பம் இடுகிறேன் ... 

உனக்கு 
கண்ணால் கடிதம் 
எழுதி -என் 
கண்ணீரால் 
கையொப்பம் இடுகிறேன் ... 

விட்டிலின் 
வாழ்க்கைதான் -என் 
காதல் -உன் வெளிச்சத்தில் 
மயங்கி விட்டேன் 

காக்கையின் கூட்டில் 
அடைகாக்கும் -குயில் 
முட்டைபோல் .. 
நான் உன் காதலில் 

கஸல் ;70



நான் படும் வேதனை 

நீ என் 
கைதொலைபேசி 
வைத்திருக்கவும் 
முடியல்ல 
விட்டுட்டு வரவும் 
முடியல்ல 

காற்றாடியை 
போட்டுவிட்டு 
தீபத்தை பார்க்கிறாய் 
நான் படும் வேதனை 

கற்பத்தையும் 
காதலையும் 
மறைக்கவே 
முடியாது 

கஸல் 73



தனியாக பேசுவேன் 

நான் இரவில் 
தனியாக பேசுவேன் 
விடியல் காலை 
அதுதான் பத்திரிகையில் 
கவிதை 

நீ 
பனிக்கட்டி 
உனக்கில்லை 
குளிர் 

நீ சூடில்லாத 
நெருப்பு 
நான் நெருப்பில்லாத 
சூடு 

கஸல் ;74


என் காதல் ஐஸ் போன்றது ..!!! 

என் காதல் 
குச்சியில் இருக்கும் 
ஐஸ் போன்றது 
இப்போ -குச்சி 
என்னிடம் இருக்கு 
ஐஸ்சைக்கானவில்லை .. 

மனம் என்னும் -என் 
வயிறு பசிக்கிறது 
நீ 
சமைக்கவில்லை 
என்கிறாய் 

சிறுவயதில் 
நடந்த நிகழ்வு 
கனவில் வந்ததுபோல் 
நீ வருகிறாய் 
மங்கலாக ...!!!

ஞாயிறு, 26 மே, 2013


பூ இதழ் மீது விழும் ... 

பூ இதழ் மீது விழும் 
கதிரவன் ஒளி போல் 
நம் காதல் -காலையில் 
ஒருவிதம் -மாலையில் 
ஒருவிதம் 

நான் 
நன்னீர் குடிப்பதா ..? 
வெந்நீர் குடிப்பதா ..? 
என்பது -உன் கையில் 

பரீட்சை மண்டபத்தில் 
நான் வினா 
நீ விடை 
திருத்துபவர் -காதல் 


புரிந்து கொள்ளுகிறேன் ... 

நீ என்னை புரிந்துகொள்ளாத .. 
போதெல்லாம் -நான் உன்னை . 
புரிந்து கொள்ளுகிறேன் ... 
நீயேன் புரிந்து கொள்ளவில்லை ... 
என்று.. 

வானத்தில் தேன்றும் 
திடீர் வானவில் நம் காதல் 
அழகானது .. 
நிலைத்திருக்காது .. 

ஒவ்வொரு மழைத்துளியும் 
நீ சிரிக்கும் சிரிப்பு 
நான் அழும் அழுகை



காதலில் வலி சாதனை ... 

என் கண் இரண்டு புண் .. 
நீதான் என் பார்வை .. 
இப்போது என்.. 
கண் இரு கண் .. 

காதல் ஒரு .. 
புதிய உலகம் .. 
படைத்தவனுக்கே... 
புரியாத உலகம் ... 

வாழ்க்கையில் வலி 
வேதனை 
காதலில் வலி .. 
சாதனை .
.. 


நின்றுவிடாதே 

நீ கண்ணீர் விடும் வரை .. 
காத்திருக்கிறேன் .. 
கண்ணீராக நான்.. 
வருவதால் .. 
ஆனந்தம்..!!! 

தயவு செய்து .. 
மௌனமாக இரு . 
குழப்பிவிடாதே.. 
என்னை .. 

நான் உன்னை மூச்சாக .. 
பார்க்கிறேன் நொடிப்பொழுதில் 
வந்துகொண்டிருப்பாய் 
நின்றுவிடாதே 


இறைவன் கூட காதலில் .. 

மழை பெய்கிறது .. 
வெளியில் போகாதே .. 
மழைத்துளி .. 
காயப்படுத்திவிடும் ... 

இடிக்கு நான் பயந்தவன் 
அல்ல 
உன் வலியைவிட 
ஒன்றும் கொடுமையானது 
அல்ல 

இறைவன் கூட 
காதலில் 
மயங்கித்தான் 
இருக்கிறான் .. 


மறக்க துடித்துக்கொண்டு...? 

இறைவனின் .. 
திருவிளையாடலைப்பார்.. 
உன்னை மதுவாக.. 
படைத்து -என்னை .. 
போதையாக .. 
படைத்துவிட்டான்..!!! 

உன்னை பார்த்ததை;; 
விட -பார்க்காமல்;; 
இருந்திருந்தால்;; 
மேல் ;; 

உன்னை மறக்க... 
நினைத்து ... 
மறக்க துடித்துக்கொண்டு .. 
இருக்கிறேன் ...!!! 


இதயம் காயப்படுகிறது ..!!! 

நீ என் வானம் ... 
நான் அதில் இருக்கும் .. 
விடிவெள்ளி ... 
விடியும் வரை.. 
காத்திருக்கிறேன் ... 
உன்னோடிருக்க ... 

பட்டம் விட... 
ஆசைப்பட்டேன்... 
இப்போ பட்டம் பெற ... 
ஆசைப்படுகிறேன் .. 
உன்னை அடைய .. 

நீ அருகில் .. 
வரும் போதேல்லாம் .. 
இதயம் காயப்படுகிறது ..!!! 


மௌன யுத்தமே காதல் 

ஆண் மௌனமாக இருந்தால் .. 
பெண் அவனை பித்தனாக்கி விடுவாள் ... 
பெண் மௌனமாக இருந்தால் ... 
ஆண் ரசித்துக்கொண்டிருப்பான் ... 
கவிதைகள் பெண் மௌனத்தையே .. 
காதலிக்கின்றன ... 
-மௌனமே உலகின் பெரும் ஆயுதம்-


சனி, 25 மே, 2013


விதி 

உன்னை ஒளிரவிட்டு .. 
என்னை இருடாக்கிறேன்.. 
என் தலை எழுத்து .. 
அப்படியிருக்கிறது ..!!!


நீ தான் என் .. 
உடலில் ஊமைக்காயம் .. 
மெதுவாகவும் கனமாகவும் 
வலியை தருகிறாய் ..!!!



தயவு செய்து.. 
நன்றாக அழு .. 
அப்போதுதான் -உன் 
மனம் கழுவுப்படும் .. 
வலியென்றால் என்ன .. 
என்றும் தெரியும் ..!!!

என் இதயத்தை ... 
சேதமாக்கிவிட்டு .. 
எங்கே நீ போகப்போகிறாய் ... 
இப்படிதான் செய்துவிட்டு .. 
வெளியேற வேண்டுமென்றில்லை.. 
நீயாக வந்த நீ .. 
நீயாக போயிருக்கலாம்

மாறு வேடம் 

நீ இப்படி செய்வாய் .. 
என்று தெரிந்திருந்தால் .. 
நான் சிறுவயதிலிருந்து ... 
மாறுவேடப்போட்டியில்... 
பங்குபற்றி இருப்பேன் ...!!!


நெஞ்சத்தை கிள்ளாதே 

கண்ணே.. 
புரிந்து கொள் ... 
இதயத்துக்கு உன்னைப்போல் .. 
நடிக்கத்தெரியாது.. 
துடிக்கத்தான் தெரியும் ..!!!



நீர் குமுழி போல் நம் காதல் 

உன் காதலும் 
என் காதலும் 
நம் காதலும் 
எப்போது கைகூடும் 

மழைத்துளியில் 
அடிக்கடி தோன்றும் 
நீர் குமுழி போல் நம் 
காதல் 

நீ என் நாள் தேதி 
கலண்டர் அல்ல 
மாதாந்த தேதி கலண்டர் 
நினைவுகளால் மாதமாகிறேன்



காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

என் மன தைரியத்துக்கு.... மருந்தாக கிடைத்தவள் நீ... காதலி என்று சிறு வட்டத்துக்குள் ....உன்னை சொல்லி விட முடியாது ..அதற்கும் மேல் .....
காதலென்றால் ..தனியே வெறும் வாழ்க்கையல்ல ..அது ஆன்மாவின் கருவி மனதில் இயங்கும் மாயன் காதலித்துப்பார் நீ மனிதனாவாய்


கவிதையில் ஒரு காதல்கதை (வசதி ) 

என் குடும்பம் தெருவோரத்தில் .. 
குடியிருக்கிறது -உன் குடும்பமோ .. 
தெருவை வாங்கும் வசதிபடைத்தது ... 
நமக்குள் வேண்டாம் காதல் .. 
அடம்பிடித்தாள் வேண்டுமென்று ..!!! 

தெருவாங்கும் குடும்பம்... 
தெருவோர காதலை ... 
திட்டமிட்டே கலைத்தது ... 
வெற்றியும் கண்டது ... 
கால் ம் கடந்தோடியது .. 

தெருவில் கண்டான் காதலியை ... 
வெள்ளைப்புடவையுடன் ... 
கையில் ஒரு குழந்தையுடன் .. 
ஓடிச்சென்றான் குழந்தையை .. 
பற்றினான் முழுமனதுடன் ... 

தெருவாங்கும் தகுதியுடையவர் 
கண்ணில் ஆறாக ஓடியது கண்ணீர் .. 
காதல் வசதியையும் தாண்டி வரும் .. 
உண்மைக்காதல் எதையும் ஏற்கும்


வெள்ளி, 24 மே, 2013

காதலுக்கு ஏது.. மரணம் ..? 

நான் உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?

நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்

நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!

என் இதய சுமை நீ 

மணிக்கூட்டில்
உள்ள நிமிடக்கம்பி
நான் -உன்னை
சுற்றி வருவதுதான்
என் வேலை
நேரம் போவது பற்றி
கவலைப்படுவதில்லை .

கூலியாளுக்கு மூடைபோல்
என் இதய சுமை நீ

உனக்காக
இதயக்கோயில் கட்ட
நினைத்தேன் -நினைவுதான்
போதாது

கஸல் 

உன்னை கண்ணுக்குள் .. 

என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...

நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்

உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!

கஸல் 

உன்னை கண்ணுக்குள் .. 

என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...

நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்

உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!

கஸல் 

என்ன செய்வது என்று ..? 

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை

என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்

கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்

கஸல் 

அது பள்ளிப்பாடம் இல்லை 

நீ என்ன ..
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே

காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை

தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது

கஸல்

நெருப்பாய் கொதிக்கிறது 

உன்னோடு பேரூந்தில்
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்

நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்

தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்

கஸல் ;06

காதல் மழை பொழியும் ... 

நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்

நீரில் தீப்பந்தம்

எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை

இன்றோ நாளையோ

உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்

கஸல் 05

காதலுக்கு ஏது.. மரணம் ..?  


நான் உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?

நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்

நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!

கஸல் 

வலியே இல்லாதவன் ...???  


எனக்கும் உனக்கும்
அகன்ற இடைவெளி
உண்டு -அதுதான்
நம் காதல்
ஒற்றை இதழ் பூப்போல

நான் உலகின்
பெரும் செல்ல்வந்தன்
வலியே இல்லாதவன்

நீ தந்த வலிகள்
தான் நான் சிறந்த கவிதை
வடிக்க காரணம்
உண்மைக்கு மதிப்பு அதிகம்

கஸல் 

தண்ணீர் போல் கண்ணீர் 

உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்


நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி

கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்

கஸல் .....

அழும் குழந்தைபோல் ...


நான் காதலில்
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை

விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்

பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...

கஸல்



ஐம்பூதமாக வருகிறாய்


எழுதினால் நிலாவாக வருகிறாய் ...! 

விண்ணை நினைத்து கவிதை


கடலை நினைத்து கவிதை 
எழுதினால் அலையாக வருகிறாய் ...! 

கற்றை நினைத்து கவிதை 
எழுதினால் தென்றலாக வருகிறாய் ...! 

சூரியனை நினைத்து கவிதை 
எழுதினால் ஒளியாக வருகிறாய் ...! 

நிலம் என நினைத்து கவிதை 
எழுதினால் என் நிழலாக வருகிறாய் ...!

பழகாதே என்று..!!! 

பாட்டி கதையோடு கதை ..
சொன்னார் கண்டவர்களுடன்
பழகாதே என்று..
உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!



என் கடவுள் 

உலகில் எத்தனை கோடி ..
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்

ஞாயிறு, 19 மே, 2013


தினமும் உனக்காக ..
காத்திருப்பதை -என்
நண்பர்கள் கேலி செய்கிறார்கள் ..
போகட்டும் என விட்டுவிடேன் ...
உனக்கு தாலியை கட்டி ..
கேலிக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் என்ற
நம்பிக்கையில் ..

கவிதை எழுதும் போது 
சிரிக்கிறேன் -கவிதை 
கேட்கிறது ஏன் சிரிக்கிறாய் என்று ..? 
கவிதை எழுதும் போது 
அழுகிறேன் -கவிதை 
கேட்கிறது ஏன் அழுகிறாய் என்று ..? 
கவிதை எழுத வைத்தவளிடம் 
கேள் என்றேன்...!



நீ என்னை வெறுத்தால் ...?
நான் காதலிப்பேன் ..
நீ என்னை விட்டு விலகினால் ...?
நான் காதலிப்பேன் ..
நீ  வேறு திருமணம் செய்தால்..?
நான் காதலிப்பேன் ...
உனக்குத்தான் பல வேடங்கள்
போடத்தெரியும் ...?
எனக்கு ஒரு வேடமே போடத்தெரியும் ...!

காதலிக்கும் போது.. 
கவிதைவரும் .. 

காதல் தோற்கும் போது 
தத்துவம் வரும் ... 

காதலிக்கும் போது.. 
சிரிப்பு வரும் ... 

காதல் தோற்கும் போது 
கண்ணீர் வரும் .. 

காதலிக்கும் போது.. 
தாடி எடுக்கப்படும் 

காதல் தோற்கும் போது.. 
தாடி வளர்க்கப்படும் ... 

காதலிக்கும் போது.. 
பூ கொடுப்பார்கள் 

காதல் தோற்கும் போது.. 
பூ வளையம் வைக்கப்படும் ...!

காதலும் காதல் தோல்வியும் 

யாரிடம் சொல்வது ...? 

பூவாக இருந்தவள் ... 
புயலாக மாறிவிட்டாய் .. 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

உயிரே நீ தான் என்றவள் ... 
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள் 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

காற்றாக இருந்தவள் .. 
கல்லறையாக மாறுகிறாள் ... 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...?



ஓடி ஓடி உழைத்தால் ...
அவாபிடித்த்வன் ...
மண்கௌவப் போகிறான் ..
என்கிறார்கள் ...!

ஓய்ந்திருந்தால்...
ஓட்டரைபோல் ஓட்டிக்கொண்டிருக்கிறான்
தண்டச்சோறு என்கிறார்கள் ...!

என்ன செய்யச்சொல்லுகிறது உலகம் ..?
கற்றுத்தரவில்லை வாழ்க்கை
இந்த உலகத்தில் எப்படி வாழ்வதென்று ..

உணர்த்துவது இதுதான்  தோழா..
ஊருக்காக வாழாதே ..
உன் மனசாட்சிப்படி வாழ்


நண்பா .... 
நீ எப்போதும் மனம் திறந்து பேசுகிறாய் ... 
எதிரிகளைக்கூட நண்பனாக்க விரும்புகிறாய் .. 
நீ எனக்கு கிடைத்த நிலையான சொத்து ... 
ஒரு அறிவுரை கேட்பாயா ...? 
மனம் திறந்து பேசு .... 
ஆனால் மனதில் பட்டதெல்லாம் .. 
பேசாதே .... 
சிலர் புரிந்து கொள்வார்கள் ... 
சிலர் பிரிந்து செல்வார்கள் .... 
இரண்டிலும் நன்மைகளும் உண்டு .. 
தீமைகளும் உண்டு .....



காதலி வேண்டும் என்றால் 
இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன் 
என்றும் அழியாத காதல் வேண்டும் .. 
உன்னைப்போல் நேசிக்கும் ஆன்மா 
வேண்டும் என்பதால் 
உனக்காகவே காத்திருக்கின்றேன்...



விண்ணை நினைத்து கவிதை 
எழுதினால் நிலாவாக வருகிறாய் ...! 

கடலை நினைத்து கவிதை 
எழுதினால் அலையாக வருகிறாய் ...! 

கற்றை நினைத்து கவிதை 
எழுதினால் தென்றலாக வருகிறாய் ...! 

சூரியனை நினைத்து கவிதை 
எழுதினால் ஒளியாக வருகிறாய் ...! 

நிலம் என நினைத்து கவிதை 
எழுதினால் என் நிழலாக வருகிறாய் ...!



என் அப்பாவே ..! 
சிறுவயதில் 
நடைபழக்கிய தந்தையே .. 
பட்டகடனை திருப்பி 
செலுத்துவதுதானே 
பிள்ளை செலுத்த வேண்டிய பணி .. 
இப்போ நீங்கள் ஊர் சுற்றிப்பார்க்க 
நான் உங்களுடன் நடக்கிறேன் 
மெது மெதுவாக ...! 


ஒருபுறம் சந்தேகப்படும் காதலன் ... 
மறுபுறம் சண்டையை தொழிலாக கொண்ட 
முறைமாமன் ... 

ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் 
இரண்டுக்கும் நடுவே அகப்பட்ட மான் போல் .. 

செத்துக்கொண்டே வாழும் என் நிலை 
என் எதிரிக்கும் வரக்கூடாது இறைவா ...!


ஞாயிறு, 12 மே, 2013

அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால் மீன்வலைபோல்
பிணைத்துக்கொண்டோம் ...!!!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை...!!!
நட்பால் உலகை ஆழ்வோம் ...
நம்மில் ஒருவர் தான் நாளைய தலைவர் ...!!!

சனி, 11 மே, 2013

உன்னை காண்பதே -என் தொழில்
உன்னை நினைப்பதே -என் வேலை
உன்னுடன் பேச துடிப்பதே -என் பணி

ஆனால் நீ ஏன் வெறுக்கிறாய் ..?
பரவாயில்லை ....
என்னை முறைத்தாவது
என் முகத்தைப்பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப்பார்…
என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
என் காதல்அப்படியாவது
உனக்குத்தெரியட்டும்..
நீ சொன்ன ஒரு வார்த்தை ..!
நெஞ்சில் வலியை தந்திருந்தால்
தாங்கியிருப்பேன் ......
இதயத்தையே சிதறடிக்க வைத்து விட்டது
அந்த வார்த்தையை நான் கூறி ...
உன்னை கேவலப்படுத்த விரும்பவில்லை ..
அந்த வார்த்தையை நீ மட்டுமல்ல
எந்த காதலர்களும் கூறக்கூடாது ...!
பல நாட்களாக பழகிய என்னை
பரதேசியாக்கியவள் -நீ

நான் பார்த்துக்கொண்டு -இருக்கும்
போதே அருகில் ஒருவனோடு
செல்லுகிறாயே ......?

வேட்கமே இல்லையா -உனக்கு

உன்னை ஒருநொடியில் துவசம்
செய்ய முடியும் என்னால் ..

ஒரு காதல் விபச்சாரியை தொட
எனக்கு அருவருப்பகா -இருக்கிறது

ஆனாலும் உன்னை விடமாட்டேன்
என் கவிதை என்னும் சாட்டையால்

அடித்துக்கொண்டு இருப்பேன் ...( தொடரும் )
ஒரு இதயம் அழுது கொண்டிருக்க மறு இதயம்
சிரித்துக்கொண்டோ இருப்பது - காதல் நம்பிக்கை துரோகம்

************

இரண்டு இதயங்கள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டு இருப்பது-
காதல் தோல்வி
************
இரண்டு இதயங்கள் கீதம் பாடுதல்- காதல் வெற்றி

************
இரண்டு இதயங்கள் வேறொரு இதயத்துக்கு பயப்பிடுதல் ...!
முறைதவறிய காதல் ( மோகக்காதல்)
***************
ஒரு இதயம் தான் இரண்டு இதயம் என நினைப்பது -ஒருதலைக்காதல்

கே இனியவன் - காதல் நிலை
ஒரு இதயம் அழுது கொண்டிருக்க மறு இதயம்
சிரித்துக்கொண்டோ இருப்பது - காதல் நம்பிக்கை துரோகம்

************

இரண்டு இதயங்கள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டு இருப்பது-
காதல் தோல்வி
************
இரண்டு இதயங்கள் கீதம் பாடுதல்- காதல் வெற்றி

************
இரண்டு இதயங்கள் வேறொரு இதயத்துக்கு பயப்பிடுதல் ...!
முறைதவறிய காதல் ( மோகக்காதல்)
***************
ஒரு இதயம் தான் இரண்டு இதயம் என நினைப்பது -ஒருதலைக்காதல்

கே இனியவன் - காதல் நிலை
என்னை தட்டிக்கொடுத்தவர்கள் ..
தட்டிக்கொடுக்க விரும்பியவர்கள் ...
இப்போ எப்படி தட்டி விடலாம் ..
என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் ...?
நன்றாக தட்டிவிடுங்கள் ..
நான் பீனிஸ் பறவை ...
சாம்பலாகி சாம்பலாகி ..
மீண்டும் வருவேன் ...
ஒருநாள் நீங்களே வருத்தப்படுவீர்கள் ...?
நான் உன்னை இரகசியமாக காதலித்த போது ..
ராஜ  சபையில் அரசனாக இருந்தேன் ....
காதல் பரகசியமானதிலிருந்து...
தெருவில் நிற்கிறேன் தனியாக ...!!!
காதலில் சந்தோசத்தை அறிய ...
என் காதல் முகவரிக்கு ..
தெரிகிறதில்லை ...
தோல்வியை மட்டும் நன்றாக ..
வாங்குகிறது ...
காதல் ஓட்டப்பந்தையம் வைத்துவிட்டு ..
நீ அன்னநடை பழகுகிறாய் ,,,?

முடியவில்லை உன் பிரிவை தாங்க முடியவில்லை ......!!!
தெரியவில்லை வேறுமுகம் எனக்கு
தெரியவில்லை.....!!!
பிரியவில்லை மனத்தால் நாம்
பிரியவில்லை...!!!
புரியவில்லை நீ ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!
நம்புகிறேன் மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!

எப்போது நீ எடுப்பாய் ....? 
இப்போது எடுப்பாயா ...? 
என்றெல்லாம் மனம் எங்கும் போது ... 
ஒவ்வொரு முறையும்.... 
மணி அடிக்கும் போதெல்லாம்... 
குதித்து விளையாடிய என் இதயம் 
இப்போ எப்ப எடுத்தாலும் .. 
சிறிது நேரத்தின்பின் எடுக்கிறேன் 
ஏன் தெரியுமா...? 

எடுத்தவுடன் நீ திட்டுவாயோ ....? 
சிரிப்பாயோ ...? என்ற ஏக்கம் தான் ..!!! 
காதலில் முதல் தேவை நம்பிக்கை ... 
நீ ஏன் என்னை சந்தேகிக்கிறாய் ...? 
யாரோ பேச்சை கேட்கும் நீ ஏன் ...? 
என் சொல்லை நம்பிகிறாயில்லை ...? 
அன்பே இன்று என்னைப்போல் .. 
எத்தனை காதலர்கள்.... 
காதல் என்ற மாயையில் ... 
மனனோயாளியாகிறார்கள் தெரியுமா ..?



நீயும் நானும் இணைந்திருந்தால் - இனிமை 
ஒருவர் பிரிந்திருந்தால் - கொடுமை 
நினைவுகளால் வேகும் - தனிமை 
எதையும் தாங்காது என் மனம் - வெறுமை 
சோகத்தால் ஏற்படுகிறது - சிறுமை 
மீண்டும் உனைக்கண்டால் - புதுமை



எனக்கு நன்றாக தெரியும் ...
என்னைக்கண்டால் முகத்தை ...
மறு பக்கம் திருப்புவாய் ...
என்னை தெரியாதுபோல் ...
தலை குனிவாய்...
நண்பர்களுடன் தொடர்பில்லாமல் ..
ஏதேதோ பேசுவாய் ...
இத்தனை வலியையும்...
நீ தருவாய் என்பதற்காகதான் ...
என் இதயத்தை சோகத்துக்குள் ..
புதைத்து வைத்திருக்கிறேன் ...
என்கண்களை மனதாலே ..
குருடாக்கி விட்டேன் ....!!!

புதன், 8 மே, 2013

ஆவலுடன் காதல் கடிதத்தை எடுத்தேன் ...
வெறும், தாள்தான் உள்ளே....
மனமுடைந்து கலங்கிநின்றேன் ...
மறு கடிதம் வந்தது எடுத்தேன் ...
கடித உறையை பிரித்தேன்
மீண்டும் வெறும் தாள்தான் ...
வந்தது மறுகடிதம் தயங்கினேன் சிலநிமிடம் ..
வந்தது பதில் .....
இருமுறையும் வெள்ளைத்தாள் ஏன்..?
அனுப்பினேன் ..நான் தெரியுமா ..?
நான் தூய்மையாக இருக்கிறேன் ..
நீயோ கலங்குகிறாய் ..!!!
சிறு எழுத்தில் ஒரு வரி
நான் உன்னை விரும்புகிறேன்...!!!

உன் பிரிவு எனக்கு பிடித்திருக்கிறது ..
மறந்துவிடு என்று சொல்லாமல் ..
மறந்துவிட்டாய் ....
வேறு ஒருவரை திருமணம் செய் ..
என்று சொல்லாமல் சென்று விட்டாய் ..
மறக்க முடியாதவர்கள் தான் ..
மறந்துவிடு என்று சொல்லமாட்டார்கள் ...!!!
நீ எனக்கு ஒரு பரிசு தா ..
வாழும் இடத்தில் புனிதமாக....
காதல் செய்வேன் என்று ...!!!


நீ சொல்லாவிட்டால் என்ன ...?
நான் அருகில் வரும் போது ஓடி ஒழிக்கிறாய் ..
கூட்டமாய் வரும் போது ஆட்கழுக்குள் மறைகிறாய்
தூரத்தில் நின்று திரும்பிப்பார்க்கிறாய் ....

முன்பைவிட இப்போது தனியாய் வருகிறாய் ..
அடிக்கடி இப்போ திரும்பி பார்க்கிறாய் ..
நீ என்ன செய்தாலும் நான் உன்னை ...
விரும்புகிறேன் என்று சொல்லமாட்டேன் ..!!!
இன்னும் இன்னும் தவிக்க ...
வேண்டும் நீயும் நானும்..!!!


இரட்டை மாட்டு வண்டியில்...
இரட்டை சடையுடன் வந்து ...
இரட்டை சிரிப்பு சிரித்தவளே ...
இரட்டை இதய அறையும் நொறுங்கிப்போனதடி...
இரட்டை வேடம் போடாத உன் சிரிப்பால் ...
இரட்டை இதயம் ஒற்றையானதடி ....!!!

நீ இதயக்கப்பல் ..
அதில் பயணம் செய்யும் பயணி-நான்
இடைக்கிடையே தளம்புகிறாய் ...
நான் இடைக்கிடையே குழம்புகிறேன்..
கப்பலை மூழ்கடித்து விடாதே ...
எனக்கு உன் நினைவென்னும் ...
கடலைத்தவிர வேறு கடலில் ...
நீந்தத்தெரியாது ...!!!


இனியின் சிந்தனைகள் ( 05)

வெறும் பானைக்குள் தவிட்டை நிரப்புவதும் ..
தங்கத்தை நிரப்புவதும் உன் சிந்தனையிலும் செயலிளும் தான் உண்டு ....!!!
*************************************
இவனுக்கு என்ன தேவை என்று நினைப்பவர்களை ..
இவனுக்கு நல்லா தேவை என்று நினைப்பவர்கள் தான் என்று அதிகம் ..!!!
*************************************
வாழ்க்கையில் விழுந்தவனை தூக்கிவிடவேண்டாம்
தூற்றாமல் இருந்தால் இருந்தால் போதும் ..!!!
*************************************
பாலுக்குள்ளேயே வெண்ணை இருப்பது
போல் உனக்குள்ளேயே நீ இருக்கிறாய் (கடவுள் )
*************************************
ஊருக்குபதில்சொல்லாதே
பைத்தியக்காரனாகிவிடுவாய் .....!!!

யாரடி யில் காதலை அளவிடமுடியாது கண்ணே ..!!!
யாரடி மனதில் காதல் தோன்றுமோ ....
யாரடி த்தாலும் காதல் நிலைக்குமோ ....
யாரடி நீ என வியந்துநிற்பேன் நான் ..!!!

பாரடியில் தோன்றிய காதலடி ...
தேரடியில் உன்னை சந்தித்த காதலடி ...
பேரிடரை நம் காதல் சந்தித்தாலும் -கண்
நீரிடையிலும் நம்காதல் நிலைக்குமடி ...!!!

சத்திரசிகிச்சை செய்து விஞ்ஞானம் ...
முகதோற்றத்தை மாற்றுகிறது ...
இதயத்தை மாற்றுகிறது ...
கண்னை மாற்றுகிறது ...
ஏன் இவ்வளவு வேதனை ..?
காதலித்துப்பார் ...
உன் முகத்தில் அவள் முகம் தெரியும் ...
உன் இதயத்தில் அவள் இதயம் இருக்கும் ..
உன் கண்ணில் அவள் பார்வை தெரியும் ...

இழந்துதான் காதலை பெறவேண்டும் ...
இழக்காமல் பெறமுடியாது எதையும் ...
இழந்து பெறவேண்டும் என்பதற்காக ...
இழந்து விடாதே அனைத்தையும் ...
இழந்தவை சிலவற்றை மீளமுடியாது ...
இழந்தால் பயனில்லை என்றும் கூறமுடியாது ..
இழக்க வேண்டியவை எது ..?
இழக்க கூடாதது எது ..?
இழப்பில் வென்றவர்களை கேள் ..!!!
இழக்கமாட்டாய் உன் காதலை ..!!!!!!!!!

நன்றி கெட்ட இதயம் ....
இத்தனை நாள் அம்மாவை ..
நினைத்து வந்து -ஒருநொடியில்...
உன்னை நினைக்கிறது...
என்ன திமிர் உனக்கு ..?
இதயத்தில் இருந்தே ...
என் குடும்பத்தை உன் விருப்பப்படி ...
ஆட்டிப்படைக்கிறாய் ....!!!
குடும்பத்துக்குள் வந்தால் ...
என்னபாடு படுத்துவாய் என்று ...
என் அம்மா நினைப்பது ஏன் தவறு ..???
*
*
*
காதலியுங்கள் குடும்பத்தை மதித்து .!!!

சனி, 4 மே, 2013

நான் இதயத்தோடு இருப்பதாக தான்
எல்லோருக்கும் நினைக்கிறார்கள்
ஆனால்
என் இதயம் உன்னிடம் இருப்பது
யாருக்கு தெரியும்....?

பூக்கள் கூட திரும்பி
பார்க்கின்றன உன் மென்மையான
அழகை
மொட்டுக்கள் கூட
மலர்ந்து விடுகின்றன
பெண்ணே...!!!
உன் புன்னகையை கண்டவுடன்.

அன்னை
தந்த தொப்புள்
கொடி என் இடையில்
கிடக்க
நீ
கட்டிய தாலி கொடி
எப்போதும் என்
மார்பில் ஆடுகிறது

பிறந்த வீடா ..?
புகுந்த வீடா ..?
என்ற பட்டிமன்றம்
போல் ஆகி விட்டது
என் வாழ்க்கை

அன்பின் ஆழத்தை கண்டேன்..!

என்னவளே
நான் உன் எதிரில்
இருந்தால் நிமிர்ந்து -ஒரு
வார்த்தை கூட பேசமாட்டாய் -
ஆனால்

உன் அன்பின் ஆழத்தை
உனது கையில் இருந்து தவறிய
சிறு துண்டில் இருந்து கண்டு கொண்டேன்
முழுவதும் எனது பெயரையே எழுதியிருக்கிறாய்

புதன், 1 மே, 2013

உன் கண்களை பார்த்தேன். 
உன் கண்களை மட்டும் பார்த்தேன். 
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன். 
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா இல்லை. 
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது 
உன் கண்கள் தான்....