இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 மே, 2013


-முகநூல் கவிதை -


படைப்புக்கள் எப்போதும் பொழுது போக்கானவை அல்ல எந்தவகை படைப்பிலும் நிச்சயம் சமூக சீர்திருத்தம் நிச்சயம் உண்டு ..அது கவிதையாக கதையாக கட்டுரையாக நகைச்சுவையாக ..எதுவாகவும் இருக்கலாம் ...!!!

இந்தவகையில் -முகநூல் கவிதைகள் -சிலவற்றை
வெளியிடப்போகிறேன்..முகநூலால்..நிறைய பயன்பாடுகள் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ..அதே முகநூல்..சமூக சீரழிவுக்கு காரணமாக இல்லாமலும் இல்லை ...!!!

எனது படைப்பின் நோக்கம் என்னால் முடிந்த அள்வுக்கு சமூக சீர்திருத்தத்தை வெளிப்படுத்துவதாகும் உங்களின் நோக்கமும் 
அதுதான் ...!!!

எனது பல்வேறு புதிய படைப்புகளில் இதுவும் ஒன்று ..கானாகவிதை ,கடுகுக்கதை .கடுகுக்கவிதை .தகவலும் கவிதையும் ,கவிதையில் ஒரு கதை .....போன்ற படைப்புக்களில்

-முகநூல் கவிதை -

என்பதும் ஒரு புதிய முயற்சி கடந்த காலம் போல் இதற்கும் 
உங்கள் ஆதரவும் கருத்தையும் எதிர் பார்க்கிறேன் ....ஒரு முகநூல் கவிதை இதோ ...

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட -உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ 
உடல் நூலுக்காக (புடவை )
தவிக்கிறேன் ....!!! 

இதுபோன்ற என்னால் முடிந்த விழிப்புணர்வை 
ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ...
........ பணிவுடன் நன்றியுடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக