ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக