எத்தனை
காலம் கடந்தாலும் .....
ஆயிரம் ஆயிரம் உறவுகள் ...
அழகழகாக தோன்றினாலும் ...
சிதையாத சிற்பம் -நீ ..!
என் உயிரே உன் நினைவுகள் ...
காலத்தால் அழியாத ...
காவியமடி என் வாழ்வில்-நீ ....!!!
உன் முதல் பார்வையே ....
என்னை முட்டாள் ஆக்கியதை ...
இன்றுவரை உணர்கிறேன் ...
உன்னை நினைத்து சிரிக்கிறேன் ...
உன் முதல் பேச்சு -என் மூளையில்
நீங்காத அழிக்க முடியாத ...
கல்வெட்டு வாசகம் ....!!!
உன் முதல் கடிதம் ....
உலகில் விலைமதிக்க முடியாத ...
அருங்காட்சி சாலையின் ...
பொக்கிஷம் - வைத்திருக்கிறேன் ...
பத்திரமாக பொட்டகத்தில் இல்லை ...
நீ என்றும் குடிகொண்டிருக்கும் ...
என் இதய அறையில் .....!!!
முதல் காதல் தோற்பதில்லை ....
வாழ்க்கையில் இணைவதில் தான் ...
தோற்றுவிடுகிறோம் - காதல்
அழிவதில்லை என்பது இதுதான் ....!
புரியாத பருவத்தில் தெரியாமல் ...
புகுந்திடும் இந்த உயிர் கொல்லி ...
முதல் காதல் முதல் காதலி ....!!!
கட்டிய மனைவியுடன் ....
பெற்ற பிள்ளைகளுடன் ...
பகிரமுடியாத பாழாய் போன ...
இந்த முதல் காதல் -இதயத்தில் ..
தோன்றும் ஒரு புற்று நோய் ...!
எத்தனை இன்பங்கள் வந்தாலும் ..
அடிக்கடி முதல் காதல் நினைவுகள் ...!!!
காதலிப்பது தவறில்லை ....
முதல் காதலை இழப்பது கொடுமை ...
வாழ்க்கை முடியும் வரை ...
எங்கேயோ ஒரு மூலையில் ...
ஏங்கிக்கொண்டு இணைப்புஇல்லாத ...
தொலைபேசிபோல் தமக்குள்ள பேசி ..
அழும் முதல் காதல் கொடுமை ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக