இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 ஜூலை, 2015

"கவி நாட்டியரசர் "

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------

யாழ்ப்பாண எழுத்தரே !

கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?

ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !

வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !

சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
நான் முதல் முதலில் கவிதை படைத்த என் அருமை தளம்
மிக்க நன்றி ;: கிருபா  கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )

-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...

2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு

3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!

முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!

அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!

கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!

கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!

தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக