சுவாசம் இழந்த உயிர் நான்..!!
நீயோ பள்ளிகூட குழந்தை
செல்லம் விடுகிறாய் ,..!
உன்னால் கிழிந்த புத்தகம் ...
கசங்கியிருக்கிறேன் நான்...!
நீயோ வானவில் வரைந்த
வண்ணம் போலிருக்கிறாய்
உன்னால் சிதறிய
ஓவியம் நானிருக்கிறேன் ...!
நீயோ சட்டென பெய்த மழைத்துளி
உன்னால் மடிந்த புல்லாகிவிட்டேன் நான் ..!
நீயோ சில்லென வீசிய தென்றல் இருக்கிறாய்
உன்னால் நூலறுந்த பட்டமாக நான் ...!
நீயோ ஓங்கி வளர்ந்த மரம் இருக்கிறாய்
உன்னால் சுவாசம் இழந்த உயிர் நான்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக