இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

இனியவனின் ஏக்கக் கவிதை

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------

அழுகிறேன் கதறுகிறேன் ... 
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!! 

நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும், 
உயிரோடு இருக்கிறேன் ........!!!

உனக்காகவோ 
என்னக்காகவோ அல்ல 
உன்னோடு வாழ்ந்த 
அந்த நினைவுகளுக்காக ........!!!

என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக