இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 ஏப்ரல், 2017

அதிசயக்குழந்தை - அன்பு

அதிசயக்குழந்தை - அன்பு
-------------------
அளவுக்கு மிஞ்சினால்.....
அமிர்தமும் நஞ்சு.........
அன்புக்கும் பொருந்தும்.....!

என்னடா உளருகிறாய்.....?
என்று கேட்டேன் அவனிடம்....
ஆசான் எனும் தோறணையில்......
ஆமாம் ஆசானே எதுவும்.....
அளவோடு இருக்கனும்.....
இல்லையேல் அதுவே நஞ்சு.........!

பணத்தின் மீது அதிக அன்பு......
உடலை கெடுக்கும் உளத்தை......
மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........
பிள்ளைகள் மீது அதிக பாசம்.....
எதிர்பார்பை கூட்டும்......
நிறைவேறாதபோது குடும்ப.....
சண்டையாக மாறுகிறது........!

துணைமீது அதிக காதல்......
கோழையாக்கிவிடுகிறது......
சுயசிந்தனையை இழக்க வைக்கிறது......
தன்மானத்தை இழக்கவைக்கிறது.......
தனிமையாகினால் முதுமையை.....
துயரமடைய வைக்கிறது.................!

சமூக அக்கறை அதிகமானால்........
அதிக பதவி ஆசை வருகிறது......
பதவி வரும் போது எல்லவற்றையும்....
கண் மறைக்கிறது........!

அப்போ எதையும் விரும்ப கூடாது
என்கிறாயா.......?
இல்லை இல்லை ஆசானே.......
எல்லவற்றையும் விரும்புங்கள்.....
எல்லாம் உங்களால் தான் ......
நடைபெறுகிறது என்பதை மட்டும்....
மறந்துவிடுங்கள்.........!


^^^^^^^^^
அதிசயக்குழந்தை 15
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக