இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 அக்டோபர், 2014

இன்பத்துப்பால் கவிதை எண் - 100

இன்பத்துப்பால்  கவிதை எண் - 100

என் இதயம்
படும் வேதனையை ...
அடிமேல் அடிவிழும்
பறைபோல் துடி துடித்து ..
என் கண்கள் ஆற்றாய்
பெருக்கேடுகின்றன ....!!!

நான் படும் வேதனையை ..
மறைக்கவும் முடியவில்லை ..
மறைத்தாலும் என் தோழிகள் ''
நம்பபோவதுமில்லை .....
காதலின் வலி எல்லா ..
பெண்களுக்கும் புரியும் ...!!!

திருக்குறள் : 1180
+
கண்விதுப்பழிதல்
+
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக