இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 அக்டோபர், 2014

ஈழப்பேச்சு தமிழில் கவிதை

கண்டபடி
கதைக்காதையுங்க ...
எனக்கு பின்னால் சுத்தாதீங்க ...
ஊரார் கண்டால் போச்சுது ...
என் வாழ்க்கை .....!!!

மானம் மரியாதையுடன் ...
வாழும் என் குடும்பத்தை ...
சந்தி சிரிக்க வைத்திடாதையுங்க....!!!

உங்கட மனசுக்குள்ள நானும் ....
என்ர மனசுக்குள்ள நீங்களும்  ....
புருஷன் பெண்சாதிபோல் ...
வாழும் நாங்க நிச்சயமாக ...
சேருவோம் கலியாணத்தில் ...!!!

என்னவனே ......
கோவிச்சிடாதே கவலைபடாதே
கொஞ்சம் பொறுத்திரு ..
கிட்டிய தூரத்தில் இருக்குது ...
நம்ம வாழ்க்கை ....!!!
+
+
கே இனியவன்
யாழ்ப்பாண பேச்சு தமிழ் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக