இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 அக்டோபர், 2014

காதல் மன முறிவு கவிதைகள்

அவள் தனக்காக ..
காதலிக்க வில்லை ...
எனக்காகவும் காதலித்தாள்...!!!

கல்லூரிக்கு
தனக்காக உணவு
கொண்டுவருவதில்லை ...
எனக்காகவும் கொண்டு வருவாள் ....!!!

அழகான பொருளை
கண்டால் தனக்கு மட்டும் ..
வாங்குவதில்லை எனக்கும் ...
வாங்குவாள் .....!!!

எல்லாமே எனக்காக ...
செய்தவள் காதல் மனமுறிவை...
தனக்காக மட்டுமே செய்து ...
சென்றுவிட்டாள்....!!!

என்னவளே ...
நீ செய்யாத ஒன்றை நான் ...
உனக்காக செய்கிறேன் ...
உன் வலியையும் சேர்த்து ...
நானே சுமக்கிறேன் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக