நித்தம் நித்தம் வேலை செய்து
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!
மழை பெய்தால் வேலையில்லை
கடும் காற்றாடித்தால் வேலையில்லை
முதலாளி வராவிட்டால் வேலையில்லை
வேலையில்லாவிட்டால் வேலையில்லை
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!
ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்
ஆண்டவனிடம் மன்றாடுவோம்
இன்று மழைவரக்கூடாது
கடும் காற்று அடிக்க கூடாது
முதலாளி சுகநலத்தோடு வாழனும்
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்
நோய் என்று இருக்க மாட்டோம்
வந்தாலும் சோரமாட்டோம்
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!
எங்களுக்கும் காலம் வரும்
தேர்தல் வரும் காலம் பொற்காலம்
இலவச உணவு உடுக்க உடை
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்
எங்களின் இயலாமையை நன்றாக பயன்
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!
ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்
ஒருசட்டம் கூட தினக்கூலியை
காப்பாற்றவில்லை
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும்
விரும்புவதுமில்லை.....!!!
எம் மத்தியில்
ஒருவன் வீறு கொண்டு எழுவான்
தலைவனாவான் காலப்போக்கில்
அவனின் காது தங்க காதாகிவிடும்
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!
மழை பெய்தால் வேலையில்லை
கடும் காற்றாடித்தால் வேலையில்லை
முதலாளி வராவிட்டால் வேலையில்லை
வேலையில்லாவிட்டால் வேலையில்லை
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!
ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்
ஆண்டவனிடம் மன்றாடுவோம்
இன்று மழைவரக்கூடாது
கடும் காற்று அடிக்க கூடாது
முதலாளி சுகநலத்தோடு வாழனும்
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்
நோய் என்று இருக்க மாட்டோம்
வந்தாலும் சோரமாட்டோம்
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!
எங்களுக்கும் காலம் வரும்
தேர்தல் வரும் காலம் பொற்காலம்
இலவச உணவு உடுக்க உடை
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்
எங்களின் இயலாமையை நன்றாக பயன்
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!
ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்
ஒருசட்டம் கூட தினக்கூலியை
காப்பாற்றவில்லை
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும்
விரும்புவதுமில்லை.....!!!
எம் மத்தியில்
ஒருவன் வீறு கொண்டு எழுவான்
தலைவனாவான் காலப்போக்கில்
அவனின் காது தங்க காதாகிவிடும்
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!