இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 செப்டம்பர், 2013

நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

நீ
தூங்கும் அழகை ரசிக்கிறேன்
அப்படி என்ன அழகு இருக்கிறது
என்று கேட்கிறாயா ...?
நீ தான் தூக்கம் என்று
நினைக்கிறாய் ...!!!
உன்
கண் மட்டுமே மூடியுள்ளது
இதயம் என் பெயரை சொல்லி
துடிப்பதை நான் அறிவேன்
மூச்சு என்னிடம் வந்து வந்து
போவதை நான் அறிவேன்
இத்தனை  இன்பத்தை யார்தான்
இழப்பார்கள் ...???
நீ நன்றாக தூங்கு
நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

(கதை கதையை கவிதையாய் )