மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன்
சற்றே எனக்கும் நாணம் வர
தலைகுனிந்தேன் .....!!!
அதிர்ந்தேன்
உன் திரண்ட மார்பழகில்
நிமிர்த்த நேரழகில் மருண்டேன்
இரு குன்றுகளையும்
மறைக்கும் மெல்லிய ஆடை
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
குறள் - 1087
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக