இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மே, 2014

என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்




என் உயிரே 

எத்தனை முறை உன்னை நேரில் பார்த்தாலும் 
எத்தனை முறை உன்னுடன் பேசினாலும் உனக்கு 
என் நினைவுகளை கடிதம் எழுதும் போது ஒரு 
சுகம் சொர்க்கத்துக்கு நிகரானதடி ....

உயிரே 

என் கடிதத்தை நீ மறைத்து மறைத்து வாசிக்கும் அந்த அருமையான நிகழ்வை நான் கற்பனையில் பார்கிறேன் சிரிப்பாகவும் சுகமாகவும் இருக்கிறது ...

நீ கடிதத்தை வாசிக்கும் போது உன்னை யாரும் 
கூப்பிட்டால் நீ படப்போகும் அவஸ்த்தையை நினைக்க அழகாகவும்இருக்கிறது..
சிறுகவலையாகவும் இருகிறது ....

காத்திரு உயிரே ..

உனக்கு இனிமேல் நான் வாரத்தில் ஒரு கடிதம் தருவேன் அடுத்த வாரம் வரை அதை நீ வைத்து
சமாளித்து கொள் . 
கவனம் உயிரே கடிதத்தை கீழே போட்டு விடாதே 
நம்ம காதல் சந்தி சிரிக்கும் படியாய் வந்திடும் ..
அப்பப்போ அப்பிடியும் இப்படியும் எழுதுவேன் 
கவனம் உயிரே கடிதம் ....!!!

@@@

என்னவளே உன் பதில் கண்டு 
எழுதுவேன் உன் பதிலை 
கடுகதியில் தா 
காத்து துடிப்பவன் உன் உயிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக