இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மே, 2014

சற்று கவனியுங்கள் ...!!!

ஆண்களே சற்று கவனியுங்கள்
வேலை வேலை என்றும்
சம்பாத்தியமே வாழ்க்கை என்றும்
வாழ்பவர்களே சற்று கவனியுங்கள் ...!!!

உங்கள குழந்தை உங்களுடன்
விளையாட ஆசைப்படுகிறான்
உங்கள் மனைவி உங்களுடன்
உறவுகள் வீடு செல்ல விரும்புகிறாள்
உங்கள் உறவுகள் உங்களுடன்
பேச விரும்புகிறார்கள் ....!!!

அத்தனையையும் இழக்கிறாய்
இந்த அற்ப வாழ்க்கை காலத்தில்
பணம் வேண்டும்  தான் ...!!!
உறவுகளை இழந்து பிரிந்து
உழைக்கும் அந்த உழைப்பில்
என்ன சுகம் உண்டு ....?

எல்லா வெளிவேலையும்
மனைவி மேல் சுமத்திவிட்டு
உழைப்பே கடமையாய் நினைக்கும்
ஆண்களே சற்று கவனியுங்கள்
பணத்துக்கு பின்னால் பாசத்துக்கும்
அன்புக்கும் ஏங்கும் உயிர்கள்
உங்கள் அருகில் ஏங்கிக்கொண்டு
இருப்பதை .......!!!

அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!

இங்கே இன்னுமொரு உளவியல்
கருத்தும் உண்டு -மறுப்பதற்கு இல்லை
நீங்கள் என்றோ ஒருநாள் அன்பை தேடும்
போது யாராலும் உமக்கு வழங்க முடியாது
இன்று அன்பை விதைத்தால் தான்
நாளை அதன் அறுவடை கிடைக்கும் ...!!!


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக