ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக