கே இனியவன் -அழகிய கஸல்
Sujay Raghu • 07-Jan-2016 10:37 pm
ரசித்துப் படிக்கத்தூண்டும் வரிகள் !! அருமை தோழரே !!
--------------
Punitha Velanganni • 05-Jan-2016 3:50 pm
அழகிய கஸல்..அனைத்து வரிகளும் வெகு அருமை தோழமையே..!!
-----
ஆண்டன் பெனி • 04-Jan-2016 12:19 pm
அருமை நண்பரே...-----
Thanjai Guna • 03-Jan-2016 9:10 am
கசலை பிழிந்து எடுக்கும் கவியே !.........வாழிய உம கவித்திறம் காலம் உள்ளளவும்......
அன்பின் நல்வாழ்த்துக்கள்......
-------
mani amaran • 01-Jan-2016 10:22 pm
அருமை... வாழ்த்துக்கள் நண்பரே...----
Shyamala Rajasekar • 01-Jan-2016 9:13 pm
இனியவனின் கஸல் .....எனும்போது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .அதை பூர்த்தி செய்திருக்கிறீர்கள் . அருமை !
வாழ்த்துகள் !
------
karthika AK • 01-Jan-2016 9:12 pm
மிக அழகிய கசல் நட்பே....ஒவ்வொரு சொல்லும் அழகியலை சுமந்தபடி.....காட்சிப் பிழைகளின் வகைப்பாடு குறித்த சிறு விளக்கம் மிக அருமை .....அசத்தல்......-----
அகர தமிழன் • 01-Jan-2016 9:45 am
அருமையான ஆக்கம் சுத்த நெய் போல் பார்க்கா பார்க்க உருகுகிறேன் உங்கள் கவி வடியமைப்பை பார்த்துஅருமை அருமை எல்லாம் சொல்லலாம்
தொடருங்கள்
-----
ulakanathan • 01-Jan-2016 9:41 am
நீங்கள் கசலில் ஒரு கலைஞர் உங்கள் கசல் பார்த்த பின்னரே அதில் எனக்கு ஒரு ஈடுபாடே வந்ததுஅருமையாக எளிமையாக் சொல்வது உங்கள் சிறப்பு
தொடருங்கள்
-------
Mohamed Sarfan • 01-Jan-2016 12:29 am
ஆஹா என்னவோர் கவியின் தனித்துவம் கசல் என்ற தனியான தீவுக்குள் இருந்தது போல் ஓர் உணர்வு.காதல் என்ற மலருக்கு வாழ்க்கை எனும் மரம் கொண்டு கவியால் கட்டப்பட்ட அழகான எழுத்துச் சோலை இக்கவியின் முகம்தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்!
-------
saimaran • 31-Dec-2015 9:28 pm
அசல் - கசல்!-----
kavin raaj • 31-Dec-2015 9:12 pm
இத்தனைபேர் கருத்து சொனன்பின் யான் என்ன சொல்வேன் ....?உங்களுக்கு மிக பெரிய எதிர்காலம் உண்டு கவியே
உங்கள் கடுமையான உழைப்புக்கு இருக்கு இறைவன் கிருபையால் சொல்கிறேன்
நன்றி நன்றி
--------
karguvelatha • 31-Dec-2015 8:29 pm
சொட்டு சொட்டாய் நனைவதில்தான்எத்தனை சுகம் ?
கலப்படமில்லா கசல் !
களங்கமில்லா கசல் !
வாழ்த்துக்கள் தோழரே !!
------
Rushanth • 31-Dec-2015 8:25 pm
எப்போது 31ம் திகது வரும் என்று காத்திருந்தேன் இந்த கசல் திருவிழாவில் உங்கள் விழாவை பார்க்கஆவலோடு இருந்தேன் .மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கணுமா ...? கசல் கவிஞருக்கு சொலல்நுமா ...?
எல்லாம் அழகு அழகோ அழகு நான் ஒரு கவிதை சுட்டி காட்டமாடேன் மற்ற கவிதை அழுதுவிடும்
உன் ஒரு கவிதையை வாசித்தேன்
மற்றைய கவிதைகள் கெஞ்சுகின்றன
என்னயும் வாசித்து விடு என்று .....!!!
இது கசல் கவிதையா நான் எழுதியது ...?
பதில் தரமுடியுமா ...?
------
karunanidhy • 31-Dec-2015 7:38 pm
சிறு துளிகள் ..பெரு வெள்ளமென கவிதை ..மழைக்கால காவிரியாய்..உங்கள் மீட்டலில்-----
Magizhini • 31-Dec-2015 6:02 pm
கஜலின் மொத்த அழகையும் சொந்தம் கொண்டுவிட்ட பெருமை உங்களைதான் சாரும் தோழரே ...அழகான காதலை படிக்கையில் அங்காங்கே தோன்றும் இளநகை , சிந்தனை எல்லாம் அருமை ...
நாங்கள் கருத்து சொல்ல என்ன இருக்கிறது???
வாழ்த்துகள்... பாராட்டுகள் ....
இப்படி ஒரு படைப்பை தந்ததிற்கு நன்றிகள் ...
------
PANIMALAR • 31-Dec-2015 3:43 pm
கஜலால் கஜலுக்கு புகழாரம் சூட்டி விட்டீர்கள் ,உங்கள் அழகிய கவிதை கஜலுக்கு ஒரு மகுடம் தான் ,வாழ்த்துக்கள் இனியவன்-----
G RAJAN • 31-Dec-2015 2:13 pm
கஜல் என்பதெல்லாம் இனியவனுக்கு கைவந்த கலை என்று தளத் தோழர்கள் அனைவரும் அறிவார்கள். பிறகென்ன கரும்பு தின்னக் கூலியா என்பது போல் வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள்..காதலில் எல்லா உணர்வுகளையும் தொட்டு இருக்கிறீர்கள். நல்ல படைப்பு.. வாழ்த்துக்கள் இனியவன்..-------
Musfir • 31-Dec-2015 2:04 pm
உங்களின் கைவந்த கலை கஸல் இதை இப்போ உலகம் அறியும் நான் சொல்ல தேவையில்லைஒரு கவிஞர் எப்படி இருக்கவேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்று கொள்ளவேண்டும் .
சிலர் கவிதையை கவிஞருக்கு எழுதுவர் . தம் வித்தாக தன்மையை காட்டுவர் . விளங்காத சொற்கள்
முடிந்தால் விளங்கிகொள் என்ற இறுமாப்பு . இதையெல்லாம் தாண்டி இன்றைய உலகின் தேவை
ஆற்ரலுக்கேற்ற கவிதையை உங்களை போல் ஒருசிலரால் தான் எழுத முடியும் . காதல் கவிதைக்கு
தபுசங்கர் ...கசலுக்கு கவிகோ ....என்பவர்களின் சொற்பதங்கள் இளைய சமுதாயத்தை கவர்ந்தவை .
அவர்களுக்கு அடுத்ததாக என் கண்ணில் பட்டவர் நீங்கள் . நான் ஒன்றும் புகழாரம் பேசவில்லை .
உண்மை . என்ன செய்வது நீங்கள் இலங்கையில் பிறந்து விட்டீர்கள் . இந்தியாவை போல் கவிரசிகர்கள்
இலங்கையில் குறைவு . இந்திய கவிஞர்கள் பிரபலமாக அருமையான ரசிகர்களே காரணம் . இங்கு அவ்வாறு
இல்லை . உங்களை போல் உள்ள இலங்கை கவிஞர்களை இந்த எழுத்தாளர்கள் ஊக்கி விக்கவேண்டும்
உங்களை நாம் வெகுவாக நம்புகிறோம் . கவிஞர்கள் மத்தியில் காப்புணர்வு இருக்கும் . அவற்ரையேல்லாம்
மறந்து ஈழத்து கவிஞர்களை நீங்கள் தான் ஊக்கிவிக்க வேண்டும் . இதை வெறும் பின்னூட்டலாக எடுக்காமல்
இருபீர்கள் என நம்புகிறேன் .
நன்றி ; உள்ளத்தில் எழுந்ததை சொன்னேன்
------
Thirumoorthi • 31-Dec-2015 1:21 pm
வித்தியாசமான பார்வை வாழ்த்துக்கள் ..!----
Santhosh Kumar1111 • 31-Dec-2015 1:02 pm
ரசித்தேன் ரசித்தேன் ரசனை மிகு கவிங்கரே . அருமையான படைப்பு .-----
kayal vilzhi • 31-Dec-2015 12:39 pm
தாங்கள் கஸலில் கை தேர்ந்தவர் ஆகிற்றே சொல்லவும் vendumaa .?Summaa பட்டையை கிளப்பி irukkinreergal.
சும்மா அடி தூள் .
வாழ்த்துக்கள் .
------
C. SHANTHI • 31-Dec-2015 11:18 am
//அஞ்சியவன் கண்ணுக்கு....அசைவதெல்லாம் பேய் ....
வீட்டுக்கு கல்யாண தரகர் ....
வந்துபோனபோது .....!!! //---> இதை மிக ரசித்தேன். அனுபவப் பட்டவர்களுக்குத்தான் இதை மிகவும் இரசிக்க முடியும்.
கஜல் விருந்து...!! உண்ட மயக்கம் எனக்கு..!!
அருமை... அத்தனையும்..!!
------
கவிஜி • 31-Dec-2015 10:52 am
தேவனிடம் ....பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!! ,,,,,
யோசித்து புரண்டு மீண்டும்... எழுகையில்.. நானும் கடவுளாகி விட்ட தருணத்தை உங்கள் வரிகள் வரம் தருகின்றன...
-----
Kumaresankrishnan • 31-Dec-2015 10:30 am
தப்புப்பண்ணிவிட்டேன் ....அக்கறையில் நின்றிருந்தால் ....
உன்னை தொட்டிருப்பேன் ...
இக்கரையில் நின்று ....
தவிக்கிறேன் - வானமே ....!!!
கண்ணாடியில் தெரியும் ...
எழுத்துப்போல் -அவள்
வலமிருந்து இடமாக இருக்கிறாள் ...
நான் மேலிருந்து ......
கீழாக முழிக்கிறேன் ....!!!
அருமை நண்பரே கஜல் வானில் காதல் சிறகடித்து பறக்கிறது, வாழ்த்துக்கள்.
------
SivaNathan • 31-Dec-2015 10:13 am
கற்பனை சிறப்பு .. காட்சிப் பிழைக்கு அருமையான விளக்கம்..-----
JINNA • 31-Dec-2015 9:59 am
ஆஹா மிக அருமை தோழரே...தாங்கள் கஜல் எழுதுவதில் கை தேர்ந்தவர் என்பதால் சும்மா புகுந்து விளையாடி விட்டீர்கள்...
மிக ரசித்தேன் தோழரே...
அதிலும்
//
என் வீட்டில் -நீ
உன் வீட்டில் - நான்
இன்பமாய் வாழ்கிறோம்
நம் பெற்றோர் ....
திருமணத்துக்கு முன் ...
எப்படி சம்மதித்தனர் ....?
//
இந்த பத்தியில் உண்மையாகவே என்னை நான் மறந்து விட்டேன்...
என்னவொரு கற்பனை வளம்
என்னவொரு கோர்வை...
பிரமிப்பின் உச்சத்தில் இந்த வரிகள்
வாழ்த்துக்கள்
வளர்வோம் வளர்ப்போம்
-----
kavithasababathi • 31-Dec-2015 9:55 am
கண்ணில் தாலிகாதல் மந்திரக்கோல்
கனவு நீர்க்குமிழி
காட்சிப்பிழை வானம்
இவை யாவுமே அற்புதம் .
-----
athinada • 31-Dec-2015 9:48 am
குட்டிக் குட்டிப் பிரம்மாண்டங்கள் குவித்துவிட்ட பிரம்மாதம் . நன்று .வாழ்த்துக்கள்----
சரவணா • 31-Dec-2015 9:47 am
அப்பாடா... சாமி கும்பிட்டு வருகிறாள்... ஹ்ஹஹஹ.. ரசித்தேன்.. நன்று-----
jayarajarethinam • 31-Dec-2015 9:30 am
சொல்லாடல் அழகு வாசித்தேன் வாழ்த்துக்கள்----
thaagu • 31-Dec-2015 8:57 am
இக்கரையில் நின்று தவிக்கிறேன் வானமே.. காட்சிப்பிழை....உன் அருகில் பத்தி அருமை... படபடக்கும் யதார்த்தம்....
காதல் கனவு காட்சிப்பிழை.
சிறப்பான படைப்பு நண்பா...
-----
Anuananthi • 31-Dec-2015 8:48 am
அஞ்சியவன் கண்ணுக்கு....அசைவதெல்லாம் பேய் ....
வீட்டுக்கு கல்யாண தரகர் ....
வந்துபோனபோது .....!!! -------------உண்மை
கண்ணாடியில் தெரியும் ...
எழுத்துப்போல் -அவள்
வலமிருந்து இடமாக இருக்கிறாள் ...
நான் மேலிருந்து ......
கீழாக முழிக்கிறேன் ....!!! ----------செம
சிந்தனை வெகு சிறப்பு ........வாழ்த்துக்கள் தோழமை..........
-----
udaya sun • 31-Dec-2015 8:41 am
அப்படியே மெதுவாக இழுத்ததுநானும் பின்னாடியே வந்தேன்
திடீரென என்னை தொலைத்து
மீண்டும் அதுவே கண்டெடுத்தது
மீண்டும் தொலையக் காத்துக் கிடந்தேன்
நேரம் வந்தது அந்த இறுதியில்
இம்முறை தொலையவில்லை
வியப்பில் மூழ்கினென் ....
கொஞ்சம் புயலின் தாங்கம் பலமாக .........
வாழ்த்துகள் .....
----
Kalaracikan Kanna • 31-Dec-2015 7:10 am
கனவுநிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!
திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!
இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!
,
^^^ என் வீட்டில் -நீ
உன் வீட்டில் - நான்
இன்பமாய் வாழ்கிறோம்
நம் பெற்றோர் ....
திருமணத்துக்கு முன் ...
எப்படி சம்மதித்தனர் ....?
அருமையான படைப்பு..நண்பரே
அசந்துவிட்டேன். வாழ்த்துக்கள்
----
chelvamuthutamil • 31-Dec-2015 7:08 am
அழகான எதார்த்தமான வரிகள் அனைத்துமே @ இறுதி வரிகள் மிக அருமைவாழ்த்துக்கள் நட்பே !
-----
பழனி குமார் • 31-Dec-2015 7:00 am
மிக அருமை இனியவன் ..வித்தியாசமான வரிகள் .....ரசிக்கத்தக்க வார்த்தைகள்உன் அருகில் ....
என் உருவ அளவில் ....
எவர் வந்தாலும் ...
நெஞ்சு படபடக்குது ....!!!
அருமை வரிகள் .....யதார்த்தம்
பூமி தட்டை.....
கோளமாக இருந்திருந்தால் ...
கடல் நீரெல்லாம் ....
உன்னைப்போல் வழிந்து ...
ஓடியிருக்கும் .....!!!
ரசிக்கத்தக்க கற்பனை ..நன்று
பூமி கோளவடிவம் ....
கலிலியோ கலிலி ...
அடித்தே கொன்றார்கள் ...
யதார்த்த வாதியை ....
விஞ்ஞானத்தின் காட்சிப்பிழை ....!!!
பாராட்டக்கூடிய வரிகள்
மொத்தத்தில் மிக நல்ல சிந்தனை இனியவன் .