இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஜனவரி, 2016

தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!

இருக்கும்
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!

கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!

வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!

வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!

கடந்த
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!

நிறைவேறாத
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!

இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!


^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்   
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக