இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜனவரி, 2016

காதல், நட்பு , கவிதைகள் 02

உறவுகளின் அடைப்புக்குள்
அடங்கி தவிக்கும் துடிக்கும்
காதல் .....!!!
உறவுகளின் எதிர்ப்பு வந்தால்
தவுடு பொடியாக்கிவிடும் ...
நட்பு ......!!!

காதலில் தோல்வி வந்தால் ....
காலம் முழுதும் வெந்து ...
துடிக்கும் மனசு ....!!!
நட்பில் தோல்வி வந்தால் ....
காத்து கொண்டிருக்கும் ...
மீண்டும் சேர மனசு ....!!!

காலத்தின் பருவத்தால் ....
காதல் மலரும் ...
கால மாற்றத்தால் காதலும் ....
மாறும்.......!!!
பருவ காலம் இன்றி வருவது ....
நட்பு ....
காலம் மாற்றம் அடைந்தாலும் ....
நட்பு மாற்றம் அடையாது ....!!!

^
காதல், நட்பு , கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக