கானல் நீரும்.. காதல் புறாக்களும்...
🌹
பெயர் தெரியாது
ஊர் தெரியாது //
உற்றார் உறவினர்
தொடர்பு தெரியாது //
கண்டவுடன் காதல்
கானல் நீராக்குமே//
காதல் வரமாகும்
காமத்தை நீக்கினால் //
காமக் காதல்
அறுவடையற்ற பயிர் //
பயணத்தில் காதல்
பயணத்தில் முடியும் //
பாடசாலைக் காதல்
படலையோடு முடியும் //
கவர்ச்சிக் காதல்
அழகோடு மறையும் //
கண்டவுடன் காதல்
கண்டத்தில் முடியும் //
உணர்ச்சிக் காதல்
மகிழ்ச்சியில் முடியாது //
@
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக