இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

வறுமை
எல்லோருக்கும் பொதுமை  .....
உலகில் சதித்தவனும் ....
சாதிக்க போகிறவனுக்கும் ....
மூலதனம் - வறுமை ....!!!

இவனுக்கோ ....
பிறப்பிடமே - வறுமை - என்றால் ....
கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் ....
உங்களுக்கு கடினமாய் தான் ....
இருக்கப்போகிறது .....!!!

யார் இவன் ...?
அடிப்படை வசதிகள் குறைந்த ....
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ...
தன்மானத்துடன் காத்திருந்து ....
கிடைத்தால் சாப்பிட்டு ....
கிடைக்கா விட்டால் ஈரதுணியை ....
வயிற்றில் கட்டி வாழ்ந்த ....
கௌரவம் மிக்க வறுமை குடும்ப ....
நாயகன் - " ஆதவன் ".......!!!

இவனது
வாழ்கை தற்காலத்துக்கு ....
எந்தளவுக்கு பொருந்தும் ...
ஏற்கும் என்று தெரியாது ....
ஆனால் இவனின் வாழ்கை ....
இவனுக்கு முழு உண்மை .....!!!

^^^

வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக