இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

அதிகாலை எழுந்து ....
அம்மணமான உடையுடன் ....
அம்மாவின் கையை பிடித்தபடி .....
வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,
எல்லாம் சுற்றி திரிந்து ....
அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....
போது நானும் போகணும்....
என்று கத்தியழுத அந்த காலம் ....
வாழ்வின் "தங்க காலம் "......!!!

பச்சைஅரிசிசோறு வேகும்போது ....
அவிந்தது பாதி அவியாதது பாதி ....
கஞ்சிக்கு கத்தும் போது ....
பொறடாவாரேன் என்று சின்ன ....
அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....
பாதி வாய்க்குள்ளும் மீதி ...
வயிற்றில் ஊற்றியும் குடித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "பொற்காலம் "......!!!

பாடசாலையில் சேர்ந்தபோது .....
புத்தகத்தையும் என்னையும் ...
தூக்கிகொண்டு சென்ற அம்மா ....
சேலையின் தலைப்பை என் தலை ....
மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...
வேக வேக வீட்டுக்கு வந்து ....
உணவும் ஊட்டிய தாயின் பாசம் ....
அந்த காலம் ....
வாழ்வின் "வைரம் தந்தகாலம் "......!!!

போட்டி பரீட்சையில் என்னோடு ...
கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ...
நண்பர்களின் உறுதுணையுடன் ....
போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து ....
பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி ஆகிய ....
அந்த காலம் ....
வாழ்வின் "வசந்த காலம் "......!!!

வேலை வாய்ப்புகாய் கிராமம் ....
விட்டு நகரம் வந்து - புறாக்கூடு ....
அறைக்குள் அவிந்தது பாதி சாப்பிட்டு ...
கொஞ்சதூரம் நடையும் மறுதூரம் ....
புகையிரத்தமும் இரவும் பகலும் .....
இயந்திரமாய் உழைத்து மீதியெதுவும் ...
மிஞ்சாமல் எதிர்கால பயத்துடன் ...
சொந்த ஊருக்கு போகாமல் ....
உழைத்து உழைத்து தேயும் ....
அந்த காலம் ....
வாழ்வின் "இயந்திரமாய காலம் "......!!!

விடுமுறைக்கு ஊர் வந்து ....
உற்றார் உறவுகளுடன் பேசாது ....
நகரப்புற மைனர்போல் வேசம் போட்டு....
நகர்புற சாப்பாட்டுக்கு நாக்கு செத்து ...
கிராம சாப்பாட்டை ஏளனமாய் பார்த்து ....
வந்த விடுமுறையை ஏதோ சமாளித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "இரும்புக் காலம் "......!!!

அம்மாவின் ஆசைக்கும் ....
மாமனாரின் எதிர்பார்ப்புக்கும் ....
உறவுகளின் வற்புறுத்தலுக்கும் ,,,,
நகரத்தில் காதலை தியாகம் செய்து ...
உறவின் கல்யாணத்தை ஏற்ற ..,,
அந்த காலம் ....
வாழ்வின் " திருப்புமுனைக்காலம் "......!!!

எதிர் பார்த்தது கிடைக்காவிட்டால் ....
கிடைத்ததை இன்பமாக கருத்தி ....
இன்பத்தோடு வாழ்ந்து இன்பத்தின் ....
அடையாள சின்னங்களோடு ....
இல்லறம் வாழும் இந்தக்காலம் ....
வாழ்வின் " இலத்திரனியல் காலம் "......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக