இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2016

அதிசயக்குழந்தை - வீடு

அதிசயக்குழந்தை - வீடு
------
எப்போதுமே ....
தெருகில் நிற்கிறாயே ....
உனக்கு வீடே இல்லையா ...?
குழந்தாய் ...?

எனக்கு சிறையில் ...
இருப்பது பிடிக்காது ...
என்றான் சட்டென்று ...!!!

வீட்டையேன் ...
சிறை என்கிறாய் ...?
அது பாதுகாப்பான ...
இடமல்லவா ....?
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் இருந்து ....
பாதுகாக்கிறதே.....
அது எப்படி சிறை ....?

ஆசானே ....
வாழ்நாள் முழுதும் ...
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் பேராடி ...
வாழும் மிருகத்துக்கு ...
எங்கே வீடு ....?

குழந்தாய் ....
அவை இவற்றிலிருந்து ....
வாழ்வதற்கான திறனில் ...
படைக்கப்பட்டுள்ளன ....
அவற்றுக்கு வீடு ......
தேவையில்லை ...!!!

அப்போ பலவீனமாக ....
படைக்கப்பட்ட மனிதனுக்கே ...
வீடு தேவைப்படுகிறது ....
அப்படிதானே ஆசானே ...?
பலவீனமாய் படைக்கபட்ட ...
மனிதனே இயற்கையை ....
அழித்தும் வாழ்கிறான் ....
எல்லா விடயத்திலும் ...
இருந்து வெளியில் வாருங்கள் ....
ஆசானே சுதந்திரமாய் ....
வாழ்வோம் .....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக