இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2016

உன் பார்வை எனக்கு பாடை

உன் கண்கள் ...
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை
எனக்கு பாடை ....!!!

காதல்
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம்
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!

கண்ணீர் துளியால்
கவிதை எழுதுகிறேன்
பன்னீர் தெளிக்க
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக