இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 மார்ச், 2014

உன் அன்பு

உன்னிடம் ஒரு நாள்
சண்டையிட்டேன்
என்னை நீ நினைப்பதே
இல்லை என்று .

எப்படி கூறுகிறாய்
என்றாய் என்னிடம்.

எனக்கு
விக்கல் எடுக்கவே இல்லை
என்றேன் கலக்கத்துடன்

சற்றே என் தலை கலைத்து
முத்தமிட்டு சொன்னாய்,

அதெல்லாம்
எப்போதாவது
நினைப்பவர்களுக்கு
தான் அப்படி,
நான் தான் உன்னை
எப்போதும்நினைத்து
கொண்டிருக்கிறேனே
என்றாய் . . .

உன் வார்த்தைகளில்
உன்னை மீறி
மிதந்து வந்தது உன் அன்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக