இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 மார்ச், 2014

கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!

காதல் செய்யும் வயதில்
காதல் கவிதையை
நேசித்தேன் .....!!!

காதல் தோல்வி கண்ட போது
காதல் வலி கவிதையை
நேசித்தேன் ....!!!

வாழ்க்கைக்கு வந்தபோது
வாழ்க்கை கவிதையை
நேசித்தேன் .....!!!

உறவு  பிரிவை சந்தித்த வேளை
அன்பு கவிதையை
நேசித்தேன் .....!!!

பாசங்களை உணர்ந்த போது
பாச கவிதையை
நேசித்தேன் ....!!!

பட்ட கஸ்ரங்களை பகிர
நட்பு கவிதையை
நேசித்தேன் .....!!!

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த
பையடா உணர்ந்த போது
ஆன்மீக கவிதையை
நேசிக்கிறேன் .....!!!

கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக