இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 மார்ச், 2014

காத்திருக்கிறேன் வாடாமல் பூவாக ...!!!


பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!

நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ  ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?

ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக