இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஏப்ரல், 2016

அதிசயக்குழந்தை - இறக்கம் 

அதிசயக்குழந்தை - இறக்கம்
-------
அதிசயக்குழந்தை .....
ஏணியில் ஏறுவதும் ....
இறங்குவதுமாய் விளையாடிக்  ...
கொண்டிருந்தான் ....!!!

அந்தவழியால் வந்த நான் ....
என்னடா செய்கிறாய் என்று ....
கேட்டேன் .....!!!

ஏறுவதும் இறங்குவதுமாய் ....
இருக்கிறேன் தெரியவில்லையா ...?
என்றான் ....?

உனக்கு
ஏற்றம் பிடிக்குமா .....?
இறக்கம் பிடிக்குமா ....?

எனக்கு இறக்கம் தான் ...
பிடிக்கும் ஆசானே ....
ஏன்டா உனக்கு எப்போதும் ....
எதிர் மறையாகதான் பிடிக்குமா ...?

இல்லை
ஆசானே எதிர் மறையின் ...
நன்மையை உணரமாட்டேன் ..
என்கிறீர்களே ....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் ....
தோல்விகள் இல்லை ....
வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!!

மலை
ஏறுபவன் இறங்கினால்-தான்
மலை ஏறியதின் சாதனை ...
தெரியவரும் .....!
பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான்
நீரின் மகிமை புரியும் ....!

அப்பில் பழம் கீழே விழுந்ததால் ...
நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் ....
வானத்து நீர் கீழே விழுந்தால் தான் ....
பூமி பசுமை அடைகிறது ....!
இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் ....
வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் .....
இழிவானவையல்ல எல்லா ....
செயல்களிலும் புரட்சிகரமானவை ...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக