இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 மே, 2015

நிலவே இறங்கிவா ....!!!

நிலவே ....
உன்னை உவமையாக கூறி ....
காதல் செய்தும் காதலரை ....
வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..?
உன்னையே உவமையாக கூறி ....
காதலியை ஏமாற்றிய ....
காதலனை சுட்டெரிக்க ....
ஒருமுறை வருவாயோ ..?

நிலவே உன்னிடம் ..
நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..?
தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....!
பூலோகத்திலோ உன்னால் ...
நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!!
நிலவே ஒருமுறை வருவாயோ ..
சூழலை மாசுபடுத்தும் இவர்களை ....
எச்சரிக்க மாட்டாயோ ...?

நிலாவில் 
பாட்டி இருக்கிறார் ....
இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!!
பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ...
வான் வெளி தூசிகளே அவை ....
நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...?
மூடநம்பிக்கையை உடைத்தெறிய ...
ஒருமுறை இறங்கி வருவாயோ ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக