இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

அவள் VS அவன் கவிதைகள் 05

அவள் VS அவன் கவிதைகள் 05
----------------------------------------------
அவள்
----------
உன்னை ரசிப்பவர்கள்
ஆயிரம் பேராக இருக்கடும்
உன்னை நேசிப்பவள் -நான்
நீ என்னை நேசிப்பதாக
இருந்தால் - கவிதயை விடு
கவிதையை நேசித்தால்
என்னை விடு -நிச்சயம்
சொல்வேன் -நீ
என்னை விட்டால் -நான்
காற்றாக மாறிவிடுவேன் ...!!!

----------
அவன்
----------
அன்பே அவசரப்படாதே
நீ கவிதையை வெறுக்க
காரணம் சொல் ...!!!
நீ தப்பாக நினைக்கிறாய்
என்றே கருதுகிறேன்
கவிதை வேறு நீ வேறு
இல்லை ...!!!
புரிந்து கொள் அன்பே
கவிதையும் நீயும்
நான் அடுத்தநொடி
உயிருடன் வாழும் மூச்சு ...!!!
-------------------

வாசகர்களே ...!!!
------------------

இந்த தொடர் ஒரு வேடிக்கை போல் இருக்கலாம்
ஆனால் ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு
சிக்கல் வந்தால் அவன் படும் அவஸ்தையை
கற்பனை செய்து பார்கிறேன் ..!!!

பார்ப்போம் இவன் என்ன செய்ய
போகிறான் என்பதை
காதலா ...? கவிதையா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக