இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என் காதலி இவள் தான் ..!!!

என் காதலியை போல் 
இந்த பூவுலகில் யாருமே 
பார்த்திருக்க மாட்டீர்கள் 
உங்கள் பிறப்பில் பார்க்கவும் 
மாட்டீர்கள் அத்தனை அழகு ...!!!

என்னோடு 
அவள் இருக்கையில் ...
கண்ணசைவில் ஆயிரம் ...
கவிதை எனக்கு தருவாள் ..
அவள் உடல் அசைவில் ...
மேலும் ஆயிரம் கவிதை 
தருவாள் ....!!!

அவள் அருகில் இருந்தால் 
நான் மெய் மறந்து கவிதை 
எழுதுவேன் - தூரத்தில் 
இருந்தால் உயிர் மறந்து 
கவிதை எழுதுவேன்....!!!
அவள் மொழி அழகில் ..
ஒருமுறை மீண்டும் 
மறுபிறப்பு எடுத்து கவிதை 
எழுதுவேன் ....!!!

என் காதலியை போல் 
இந்த பூவுலகில் யாருமே 
பார்த்திருக்க மாட்டீர்கள் 
உங்கள் பிறப்பில் பார்க்கவும் 
மாட்டீர்கள் அந்தளவு 
கொடூரமானவள் ...!!!

பேசுகின்ற வார்த்தைகள் 
ஊசிபோல் குற்றும் 
பார்வை சூரியனைப்போல்
சுட்டெரிக்கும் ..
வேண்டுமென்றே 
சண்டையிடுவாள் - திடீடென 
என்னைவிட்டு போவாள் ...!!!

வீதியில் செல்லும் போது
என்னை தெரியாததுபோல் 
செல்வாள் .-என்னை உயிரோடு 
கொல்லவாள் அத்தனையும் 
உள்ள பாதகி சண்டாலிதான் 
என் செல்ல காதலி ...!!!

அவள் என்னோடு இன்பமாக 
இருக்கும் போது காதல் கவிதை 
எழுதுவேன் ..!!!
அவள் என்னோடு கோபிக்கும் 
போது காதல் வலி கவிதை 
எழுதுவேன் ...!!!
செல்லம் கொஞ்சும் போது 
சில்லென்று சின்ன காதல் கவிதை 
எழுதுவேன் ...!!!
சின்ன சண்டைபோடும் போது 
சின்ன வலிகவிதைகள் 
எழுதுவேன் ...!!!

இத்தனையும் 
கொண்டவள் தான் என் 
என் உயிர்காதலி 
என்னை வாழவைக்கும் 
கவிதை காதலி..
தூக்கத்திலும் வதைக்கும் 
காதலி 
நினைவெல்லாம் இருக்கும் 
அன்பு காதலி 
என் கற்பனை காதலி ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக