இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

அவள் VS அவன் கவிதைகள் 04

அவள் VS அவன் கவிதைகள் 04
----------------------------------------------
அவள்
----------
ஒன்று
சொல்வேன் கேள்...!!!
உன்னை நான் உயிராய்
காதலிக்கிறேன் -அது
உயிர் மேல் உண்மை
ஆனால் நீ கவிதை
எழுதுவது சுத்தமாய்
பிடிக்கவில்லை - ஒரு
காரணம் உண்டு காலம்
வரும்போது காரணம்
சொல்வேன் ....!!!

-------------
அவன்
-------------
உயிரே நீ என்னை...
காதலிக்கிறாய் என்று...
சொன்னவுடன் என்னுள்...
இருந்த உயிரோட்டத்தை...
உணர்ந்தேன் - நிச்சயம்...
நீ என் கவிதையையும் ...
ஏற்பாய் என்னை விட...
என் கவிதையை ரசிப்பாய் ..!!!
கவிதையும் நீயும் என்
இரட்டை கண்கள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக