இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஜூன், 2013

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம் 
தெரியும் படி வைத்து -தெருவில் 
போகிறேன் -எல்லோரும் 
கும்பிடுறாங்க ..சாமி 
என்கிறாங்க ...

ஞானத்தில் பழுத்து 
அதிகமாக பேசாமல் 
ஊத்தை துணியுடன் 
ஞான பார்வையுடன் 
என் அருகில் ஒருவர் 
நிற்கிறார் -அவர் கேட்காமல்
காசை போடுகிறார்கள் 
பிச்சையாக ...


என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை 
பார்த்து எவ்வளவு 
காலம் தான் ஏமாறும் 
இந்த உலகம் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக