இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூன், 2013

8. தொண்டர் 1 : “தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?”

தொண்டர் 2 : ” சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
‘எந்த வட்டத்தின் சார்பில போடுறே’ன்னு கேட்கிறாரு”
==========================================

9. “வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?”

“ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க”

“ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்”

“ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்”

“அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”
==============================================

10. “இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?”

“பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்”
===============================================

11. “டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை”

“அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?”

“காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!”
===============================================

12. தொண்டர் 1: “தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?”

தொண்டர் 2: “போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!”
==============================================

13. “சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”

“என்ன செய்தே?”

” ‘சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”

=============================================

14. ஆசிரியை : “ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?”

மாணவன்: “ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்”
=============================================

15. “ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?”

” ‘உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார் சார்”
=============================================

16. “இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?”

“இது விவாக மேடை இல்லை தலைவரே; ‘விவாத மேடை’

நன்றி ;முழுமுதலோன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக