இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஜனவரி, 2021

என் உயிர் ரசிகனே

 என் அன்புள்ள ரசிகனுக்கு


கவிப்புயல் எழுதும் கவிதை

---------------------------------------

ஒரு

கவிஞன் தன் வலிகளை....

வரிகளாய் எழுதுகிறான் ....

ஒரு

ரசிகன் அதை ஆத்மா ...

உணர்வோடு ரசிக்கிறான் .....

கவிதை அப்போதுதான் ...

உயிர் பெறுகிறது .....!


#


என் உயிரை உருக்கி ....

நான் எழுதும் கவிதைகள்

என்னை ஊனமாக்கி மனதை ...

இருளாக்கி இருந்தாலும் ....

கவிதைகள் உலகவலம் வருகிறது ...

உலகறிய செய்த ரசிகனே ...

உன்னை நான் எழுந்து நின்று ....

தலை வணங்குகிறேன் .....!


#


என்இரவுகளின் வலி......

விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....

பகலின் வலி அவள் எப்போது ....

இரவில் கனவில வருவாள் ....?

ஏங்கிக்கொண்டிருக்கும்.....

இதயத்துக்கு புரியும் .....

ரசிகனே உனக்குத்தான் புரியும் ....

நான் படுகின்ற வலியின் வலி ......!


#


ஒருதலையாக காதலித்தேன் ...

காதலின் இராஜாங்கம் என்னிடம் ....

காதலை சொன்னேன் ....

என் இராஜாங்கமே சிதைந்தது .....

காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....

பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....

காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....

கண்டு கொல்லாதே ரசிகனே .....!


#


என்

காதலுக்கு காதலியின் முகவரி ...

இன்னும் தெரியவில்லை ...

அதனால்தான் இதுவரை .....

என்னவளில் பதில் வரவில்லை ...

வெறுத்தவள் மறுத்தவளாகவே....

வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...

என் கவலையை சொல்லாமல் ....

யாரிடம் சொல்வேன் .....?

என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!


#


வேதனையில்

சாதனை செய்யப்போகிறேன் ....

என்னை விட தாங்கும் இதயம் ...

இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....

வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....

என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....

அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....

என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!


#


என்னை உசிப்பி விட்டு ....

வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....

என்னை காதல் பைத்தியம் ....

வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...

இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....

என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!

ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...

என்னை பைத்தியம் போல் ....

அவர்களுக்கு காட்டுகிறது ....

காதல்கிழியாமலே இருக்கிறது .....!


#


பள்ளி

பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....

பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....

காதலியால் வாழ் நாள் முழுவதும் ....

முதலிடம் அருமையான வேஷம்.....!

பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....

கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக