அடியேன் 100 க்கும் மேற்பட்ட ஹைக்கூ எழுதியுள்ளேன் அவற்றில் சில....
............
இட்ட முட்டை சுடுகிறது.
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்.
ஏக்கத்தோடு பார்த்தது கோழி.
^^^
கடத்தல்காரன் கையில் பணம்.
வன அதிகாரிகள் பாராமுகம்.
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்.
^^^
காடழிப்பு.
ஆற்று நீர் ஆவியானது.
புலம்பெயரும் அகதியானது கொக்கு.
^^^
குடும்ப தலைவர் மரணம்.
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்.
கருத்தடை நாயின் சாபம்.
^^^
சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை
^^^^^
வியர்வை சிந்தாமல் வேண்டாம்.
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்.
ஊதியம்.
@
கண் வரைதல் ஓவிய போட்டி.
முதல் பரிசு பெற்றான் மாணவன்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
@
தொட்டிக்குள் இலை குவிகிறது.
தூய்மையானது சாப்பாட்டுக்கடை.
ஏழை வயிறு நிரம்பியது.
@
பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்
தொண்டன் தீக்குளிப்பு.
கட்சி தவைவர் பெரும் சோகம்.
ஒரு வாக்காள் தோல்வி
....
இவ்வாறு முடிவு எதிர் பாராத திருப்பமாய் இருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக