இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 அக்டோபர், 2015

கே இனியவன் தத்துவ கவிதை

துணையையும் துணியையும்
எம்முடன் இரண்டற கலந்த ....
உடமை என்பேன்.....
துணையையும் துணியையும் ...
தூர விலக்கினால் - போவது ...
என்னவோ நம் மானம் தான் ....!!! 

துணையையும் துணியையும்....
தொலைத்தவர்கள்.... 
தொலைந்து போகின்றார்கள் ...
வாழ்தலைப் புரியாமல்....
வாழ்க்கையைப் பிணியாக்கி ....
தொலைந்துபோகின்றவர்கள்....!!!

துணைக்குள்ளும் துணிக்குள்ளும்
அடங்கி போனவர்கள் ....
நிம்மதிக்காய் அமைதிக்காய் ....
அலைந்து திரிகிறார்கள் ....!!!

வாழ்கையின் தூரம் புரியும் வரை...
வாழ்தல் எவருக்கும் புரிவதில்லை.....
வாழ்தல் அர்த்தம் புரியும் வரை
வாழ்வது எதுவும் வாழ்க்கை இல்லை....!!!

+ 
கே இனியவன் தத்துவ கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக