இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2015

எப்போது உணர போகிறாய் ...?

இலை
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன்
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 868

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக